ETV Bharat / sports

அதுலாம் தொழில் ரகசியங்க... சொல்ல மாட்டேன் -தோனி பளிச் - ஹைதராபாத் அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, தனது தொழில் ரகசியத்தை சொல்ல முடியாது என்று வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்.

தோனி
author img

By

Published : Apr 24, 2019, 9:09 AM IST

Updated : Apr 24, 2019, 10:32 AM IST

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 41ஆவது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. உள்ளூர் மைதானமான சேப்பாக்கத்தில் களமிறங்கிய சென்னை அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, வார்னர் 57, மணிஷ் பாண்டே 83 ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 175 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய சென்னை அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அந்த அணியின் தொடக்க வீரர் டு பிளசிஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் வாட்சனுடன் ஜோடி சேர்ந்த ரெய்னா தனது பங்கிற்கு 38 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

watson
வாட்சன்

இந்த வருடம் பெரிதாக சோபிக்காத வாட்சன், தனது ஆட்டத்தை நிரூபித்தே ஆக வேண்டும் என்பதால், தனது அதிரடியை காண்பிக்க தொடங்கினார். நிச்சயமாக சதம் அடித்து விடுவார் என்று சென்னை ரசிகர்கள் ஆர்பரித்துக் கொண்டிருந்த தருணத்தில், வாட்சன் 96 ரன்களில் (53 பந்துகள், 9 பவுண்டரி, ஆறு சிக்சர்கள்) புவனேஷ்வர்குமார் பந்தில் பெய்ர்ஸ்டோவிடம் பிடிபட்டார்.

அவர் அவுட்டானாலும் கடைசி இரண்டு ஓவரில் 13 ரன்கள்தான் தேவைப்பட்டது. ஆனால் சென்னை அணி வழக்கம்போல் அவர்களின் ரசிகர்களுக்கு ரத்த அழுத்தத்தை உண்டாக்கி இறுதி ஓவரில் வெற்றி பெற்றது.

பின்னர் வழக்கம்போல் போட்டிக்கு பின் பேட்டியளித்த சென்னை அணியின் கேப்டன் தோனியிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தோனி, 'ஒவ்வொரு போட்டியிலும் ஒரு வீரர்கள் எழுச்சி காணுவது மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த சில போட்டிகளில் வாட்சன் பெரிதாக ரன் எடுக்கவில்லையென்றாலும், அவர் ஒரு மிகச்சிறந்த வீரர். எந்த சமயத்திலும் ஆட்டத்தை மாற்றியமைக்கும் திறமை படைத்தவர் என்ற நம்பிக்கையால் அணி நிர்வாகம் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளித்தது' என்றார்.

Harsha_dhoni
பேட்டியளிக்கும் தோனி

அதைத் தொடர்ந்து நிகழ்ச்சி வர்ணணையாளர் தோனியிடம், 'எப்படி உங்களது சிஎஸ்கே அணி ஒவ்வொரு தொடரிலும், பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறுகிறது?' எனக் கேள்வி எழுப்பினார். அப்போது 'நான் அதை எல்லோரிடமும் கூறினால் என்னை ஏலத்தில் வாங்க மாட்டார்கள் அதனால்தான் சொல்வதில்லை. அதை சொல்ல முடியாது. ஏனெனில் அது தொழில் ரகசியம்' என தோனி தெரிவித்தார்.

இந்தத் தொடரின் ஆரம்பத்திலிருந்தே சென்னை அணி புள்ளிப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், கடைசியாக ஹைதராபாத் அணி மற்றும் பெங்களூரு அணிகளிடம் பெற்ற தோல்வியாலும், ராஜஸ்தான் அணிக்கு எதிரான டெல்லி அணியின் வெற்றியாலும் சூப்பர் கிங்ஸ் இரண்டாம் இடத்திற்கு செல்ல நேரிட்டது. நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணி ஏறக்குறைய பிளே-ஆப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

ஐபிஎல் தொடர் வரலாற்றில் அனைத்து தொடர்களிலும் பிளே-ஆப் போட்டிகளில் பங்கேற்ற ஒரே அணி என்ற பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்வசம் வைத்து வருகிறது. அது இந்த வருடமும் நிறைவேறப் போவதால் அந்த அணியின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Intro:Body:Conclusion:
Last Updated : Apr 24, 2019, 10:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.