சென்னை அணியை எதிர்கொள்ளும் போட்டிக்கு முன்னதாக கொல்கத்தா அணியின் ட்விட்டர் பக்கத்தில் மூன்று நாளில் சந்திப்போம் என சென்னை அணிக்கு சவால்விட்டிருந்தது.
இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கொல்கத்தா அணிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக,
அப்பத்தா அம்மத்தா கொல்கத்தா சென்னைகிட்ட வாங்காத ஊமக்குத்தா. மூணு நாள்ல சொன்ன மீட்டு இப்ப முச்சந்தில உக்காந்து முக்காடு போடவச்சுருச்சா தல வேட்டு. அங்காளி பங்காளி வா இனி ஆட்டம் தான் எப்போதும் அடி அடி. சிஎஸ்கே மேட்சினாலே வாய்கிழிய பேசுவியே கொல்கத்தா.இப்ப சொல்லு நாங்க கெத்தா
என பதிவிட்டுள்ளார். இது சென்னை ரசிகர்களிடையே ட்ரெண்டிங்காகி வருகிறது.