ETV Bharat / sports

இது மாதிரி தோனி கிட்ட பன்னிடாதப்பா...பந்த்தை எச்சரித்த சிஎஸ்கே ரசிகர்கள்! - ipl

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை - டெல்லி அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டத்தின்போது சுரேஷ் ரெய்னாவை, தடுத்த ரிஷப் பந்த்திற்கு சிஎஸ்கே ரசிகர்கள் ட்விட்டரில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

csk
author img

By

Published : May 2, 2019, 8:44 AM IST

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் முதல் இரண்டு இடங்களில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் சென்னை அணி பேட்டிங் செய்தது. அப்போது சென்னை அணியின் ரசிகர்களால் குட்டி தல என்று செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.

அப்போது, ஓவரின் இடைவேளை முடிந்து மீண்டும் ரெய்னா பேட் செய்ய கிளம்பியபோது ரிஷப் பந்த் அவரை தடுத்து அவருடன் குறும்புச்சேட்டை செய்தார். பின்னர் ரெய்னா சிரித்துக்கொண்டே பேட்டிங் ஆட சென்று விடுகிறார். இந்த வீடியோ ஐபிஎல்-இன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது. அந்த பதிவின் கீழ் சென்னை ரசிகர்கள், இதுபோன்ற முயற்சிகளை தோனியிடம் செய்ய வேண்டாம் என அவருக்கு எச்சரிக்கை கமெண்டுகளை பதிவிட்டனர்.

tweet
சிஎஸ்கே ரசிகரின் டிவிட்

மேலும், கடந்த 2015ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆடியபோது, வங்கதேச பவுலரான முஸ்தாபிஷூர் தோனியை தடுக்க முயன்றபோது நடந்த சம்பவத்தையும் நினைவு கூர்ந்தனர்.

ரிஷப் பந்த் இதுபோன்ற குறும்பு சேட்டையில் ஈடுபடுவது புதிதல்ல.

நேற்றைய போட்டியில் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரெய்னா அரைசதம் அடித்தார். இறுதிக்கட்டத்தில தோனியும் அதிரடியாக ஆடி, சென்னை அணி 179 ரன்கள் குவிக்க உதவினார். இறுதியில், சென்னை ஸ்பின்னர்களின் துல்லியமான சுழற்பந்துவீச்சில் சிக்கிய டெல்லி அணி 99 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதனால் சிஎஸ்கே 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது.

Intro:Body:

sports

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.