ஐபிஎல்-ன் நேற்றையப் போட்டியில் சென்னை-டெல்லி அணிகள் மோதின. அதில் முதலில் ஆடிய டெல்லி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய சென்னை அணி நிதானமாக ஆடியது. சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா 30 ரன்களுக்கு ஆட்டமிழந்ததையடுத்து, தோனி களமிறங்கினார். அப்போது மைதானத்தில் இருந்த அவரது மகள் ஸிவா தோனி, தோனியை உற்சாகப்படுத்தும் விதமாக 'பாப்பா....கமான் பாப்பா' என மழலைக் குரலில் கத்தி உற்சாகப்படுத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தோனி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 32 ரன்கள் எடுத்து அணியை வெற்றிபெறச் செய்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் தோனி - ஸிவா தமிழில் பேசிய வீடியோ வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.