இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கான் மற்றும் அதிரடி வீரர் யுவராக் சிங் ஆகிய இருவரும் இந்திய அணிக்காக ஒரே நாளில் கென்யாவுக்கு எதிரான போட்டியில் ஒன்றாக அறிமுகமாகினர்.
பின்னர், 2014ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு ஜாகீர் கான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால் யுவராஜ் சிங்கோ இதுவரை ஓய்வு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
இந்நிலையில், மும்பை அணிக்காக 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடிவரும் யுவராஜ் சிங். அதே அணியின் நிர்வாகக் குழுவில்ஜாகீர் கான் செயல்படுவது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனைக் கண்டுகொண்ட ரசிகர்கள் யுவராஜ் சிங்கின் மனவலிமையை கொண்டாடிவருகின்றனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங், அதிலிருந்து மீண்டுவந்து இந்திய அணியில் இடம்பெறுவதற்கு தற்போது போராடிவருகிறார். மேலும், நேற்று டெல்லி அணிக்காக ஆடிய யுவராஜ் சிங், 35 பந்துகளில் 53 ரன்கள் அடித்ததை அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.