ETV Bharat / sports

முதல் வெற்றிக்கு போராடும் கோலி; பெங்களூரு - ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை! - டிவில்லியர்ஸ்

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், பெங்களூரு அணி ஹைதராபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

பெங்களூரு - ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை
author img

By

Published : Mar 31, 2019, 1:00 PM IST

12-வது ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இதில், ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இந்த தொடரில் ஆடிய இரண்டுப் போட்டிகளிலும் பெங்களூரு அணி தோல்வியை தழுவியதால், இன்றையப் போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

மறுமுனையில், ஹைதராபாத் அணி இரண்டுப் போட்டிகளில், தலா ஒரு தோல்வி, வெற்றி என வலுவான நிலையில் உள்ளது. பெங்களூரு அணியை பொறுத்தவரையில், கோலி, டிவில்லியர்ஸ், நல்ல ஃபார்மில் இருந்தாலும், பேட்டிங்கில் அவர்களை நம்பியே அணி உள்ளது. அதுமட்டுமின்றி, ரஷித் கான், புவனேஷ்வர் குமார்,சந்திப் ஷர்மா போன்ற வலுவமான ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை இவ்விரு பேட்ஸ்மேன்களும் எவ்வாறு எதிர்கொள்வார்கள் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Kohli, Abde Villiers
கோலி, டிவில்லியர்ஸ்

சாஹல், நவ்தீப் சைனி ஆகியோர் பெங்களூரு அணிக்கு நன்கு பந்துவீசினாலும், அணியில் டிம் சவுதி சேர்க்கப்பட்டால், பெங்களூரு அணியின் பந்துவீச்சு சுற்று கூடுதல் பலம் சேர்க்கும் எனத் தெரிகிறது.

அதேசமயம், ஹைதராபாத் அணியில், ஆக்ரோஷமான ஃபார்மில் இருக்கும் டேவிட் வார்னரை ஆட்டமிழக்கச் செய்ய, பெங்களூரு வீரர்கள் ஏதேனும் யுக்தியை வைத்திருக்கிறார்களா என்ற கேள்வி அடிபடுகிறது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 13 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில், ஹைதராபாத் அணி 7 போட்டிகளிலும், பெங்களூரு அணி 5 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. ஒரேயொரு போட்டி எந்த முடிவும் இல்லாமல் முடிந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, இன்று நடைபெறவுள்ள போட்டியில் வார்னர் - கோலி இருவரில் யார் அதிமான ரன்களை அடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டி ராஜீவ்காந்தி மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.