பஞ்சாப் - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி மொகாலியில் நடைபெற்றது. இதில் 14ஆவது ஓவரின்போது, அஷ்வின் வீசிய பந்தை வார்னர் மின்னல் வேகத்தில் நேராக அடிக்க, அதை தடுத்த அஷ்வின் கண் இமைக்கும் நேரத்தில் மறுமுனையில் இருந்த நபியை ரன் அவுட் செய்தார். இது ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது.
மேலும், இந்தத் தொடரில் ராஜஸ்தான் வீரர் பட்லரை அஷ்வின் மன்கட் முறையில் ரன் அவுட் செய்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று நபியை ரன் அவுட் செய்த நிகழ்வினையடுத்து ரசிகர்கள் அஷ்வினை பாராட்டி வருகின்றனர்.
மேலும், அஷ்வின் பந்துவீசியபோது மறுமுனையிலிருந்த வார்னர், அஷ்வினின் கையிலிருந்து வெளியேறுவதற்கு முன்னால் எல்லைக்கோட்டை விட்டு வெளியேறாமல் உள்ளேயே இருந்தது டிரெண்டிங் ஆகி வருகிறது.