மொகாலியில் நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதனிடையே, ஆட்டத்தின் முதல் ஓவரை வீசிய அஷ்வின், ஆறு பந்துகளுக்கு பதிலாக ஏழு பந்துகளை வீசினார். அவரது ஓவரை எதிர்கொண்ட மும்பை அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் ஷர்மா 2, டி காக் 1 ரன்னை அடித்தனர். ஆனால், தனது ஓவர் முடிந்தது என்று தெரியாமல் அஷ்வின் வீசிய ஏழாவது பந்தை டி காக் பவுண்டரி அடித்தார்.
இதனால், மும்பை அணி முதல் ஓவரில் 7 ரன்களை எடுத்தது. இதை நடுவர் கவனிக்காதது மீண்டும் ஐபிஎல் கிரிக்கெட்டில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதுவும் அஷ்வின் ஆடும் போட்டியில்தான் இதுபோன்ற சர்ச்சைகள் கிளம்கிறது என நெட்டிசன்கள் இணையதளத்தில் விமர்சித்து வருகின்றனர்.