ETV Bharat / sports

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் இன்சமாம் உல் ஹக் ராஜினாமா? அழுத்தமா? 5 பேர் குழு விசாரணை! - Inzamam ul Haq

Inzamam ul Haq : பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வு குழுத் தலைவர் இன்சமாம் உல் ஹக் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளார்.

Inzamam ul Haq
Inzamam ul Haq
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 7:04 AM IST

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக இன்சமாம் உல் ஹக் அறிவித்து உள்ளார்.

53 வயதான இன்சமாம் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணியின் தலைமை தேர்வு குழுத் தலைவராக பணியாற்றிய நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இரண்டாவது முறையாக தேர்வு குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார். இன்சமாம் உல் ஹக் தலைமையிலான தேர்வு குழு ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியை தேர்வு செய்தது.

இருப்பினும் இவ்விரு தொடர்களிலும் பாகிஸ்தான் அணி பெரிய அளவில் சோபிக்கவில்லை. குறிப்பாக, தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ள பாகிஸ்தான் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

தொடர் தோல்வியை அடுத்து பாகிஸ்தான் அணி மீது விமர்சனங்கள் அதிகரித்துள்ள நிலையில் தேர்வுக் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக இன்சமாம் உல் ஹக் அறிவித்து உள்ளார். அதேநேரம், இன்சமாமின் ராஜினாமாவுக்கு வேறொரு காரணமும் சொல்லப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் ஏஜென்ட்டாக சொல்லப்படும் தல்ஹா ரெஹ்மானிக்கு சொந்தமான யாசோ இன்டர்நேஷனல் லிமிடெட் என்கிற தனியார் நிறுவனத்தில் இன்சமாம் பங்குதாரராக உள்ளார்.

இதே நிறுவனம் பாபர் அசம், முகமது ரிஸ்வான் மற்றும் ஷாஹீன் அப்ரிடி உள்ளிட்ட வீரர்களின் விளம்பர ஒப்பந்தத்தை கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கும், வீரர்களுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஊதியம் மற்றும் விளம்பரம், ஐசிசியிடம் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெற்ற பணத்தில் பங்கு தர வேண்டும் என வீரர்கள் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் இன்சமாம் உல் ஹக், வீரர்கள் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இடையே இருந்து பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் இன்சமாம் உல் ஹக், விளம்பர ஏஜென்ட் நிறுவனத்துடன் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டதாக கிரிக்கெட் வாரியத்திற்கு தெரியவந்த பின் அதன் காரணமாக வாரியம் கொடுத்த அழுத்தத்தினால் இன்சமாம் உல் ஹக் ராஜினாமா செய்து இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

அதேநேரம் இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 5 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : AFG Vs SL: இலங்கை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்.. 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.