ETV Bharat / sports

SA vs IND: இலக்கு நிர்ணயித்தது இந்தியா; முதல் வெற்றி யாருக்கு?

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 94 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. தென்னாப்பிரிக்கா வெற்றி பெற 211 ரன்கள் தேவை என்ற நிலையில், இந்தியாவின் வெற்றிக்கு மீதமுள்ள 6 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

SA vs IND Boxing Day Test Day 4 Scorecard

author img

By

Published : Dec 30, 2021, 7:44 AM IST

சென்சூரியன்: தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட இந்த தொடர், பல்வேறு தடுப்பு நடவடிக்கைக்கு இடையில் நடைபெறுகிறது.

நான்காம் நாள் ஆட்டம்

முதல் டெஸ்ட் போட்டி சென்சூரியன் நகரின் சூப்பர் ஸ்போர்ட் கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 327 ரன்களையும், தென்னாப்பிரிக்கா அணி 197 ரன்களையும் எடுத்தன. இதனால், 130 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 16 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்தது.

சொதப்பிய இந்திய பேட்டிங்

இந்நிலையில், கே.எல். ராகுல், நைட் வாட்ச்மேன் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் நேற்றைய (டிசம்பர் 29) நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். சிறிதுநேரத்தில், ஷர்துல் 10 ரன்களில் ரபாடாவிடமும், ராகுல் 23 ரன்களில் இங்கிடியிடமும் வீழ்ந்தனர்.

இதன்பின்னர் வந்த கேப்டன் விராட் கோலி 18, புஜாரா 16, ரஹானே 20, அஸ்வின் 14 ரன்களுடன் சீரான இடைவேளியில் பெவிலியன் திரும்பினர். அதிரடியாக விளையாடி வந்த ரிஷப் பந்த் 6 பவுண்டரிகள் உள்பட 34 ரன்களில் ரபாடாவிடம் வீழ்ந்து ஆட்டமிழந்தார்.

305 ரன்கள் இலக்கு

கடைசியாக ஷமி 1 ரன்னில் ரபாடாவிடமும், சிராஜ் ரன்னேதும் இன்றி ஜன்சென்னிடமும் விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியா 174 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி, தென்னாப்பிரிக்கா அணிக்கு 305 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து, தென்னாப்பிரிக்கா தொடக்க வீரர்களாக மார்க்ரம், கேப்டன் டீன் எல்கர் ஆகியோர் களமிறங்கினர். இரண்டாவது ஓவரிலேயே ஷமி, மார்க்ரம்மின் விக்கெட்டை கைப்பற்றினார்.

கேப்டன் எல்கர் ஒருபுறம் நிலைத்து நின்று விளையாட, மற்ற வீரர்களான கீகன் பீட்டர்சன் 17, ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸன் 11 ரன்களில் முறையே சிராஜ், பும்ராவிடம் வீழ்ந்தனர். பின்னர், நைட் வாட்ச்மேனாக கேசவ் மகாராஜ் களமிறங்கினார்.

பொறுமை காட்டிய எல்கர் 121 பந்துகளில் அரைசதம் அடித்தார். பின்னர், இன்னிங்ஸின் 41 ஓவரை வீசிக்கொண்டிருந்த பும்ரா, ஓவரின் ஐந்தாவது பந்தில் கேசவ் மகாராஜை போல்டாக்க நான்காம் நாள் ஆட்டம் முடித்து வைக்கப்பட்டது.

பும்ராவின் அசத்தல் 100*

பும்ரா இரண்டு விக்கெட்டுகளையும், ஷமி, சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். பும்ரா ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸான் வீழ்த்தியபோது, அந்நிய மண்ணில் தனது 100ஆவது டெஸ்ட் விக்கெட்டை (23 போட்டிகள்) பும்ரா கைப்பற்றினார். ஆனால், அவர் இந்திய மண்ணில் வெறும் 4 டெஸ்ட் விக்கெட்டுகளை (2 போட்டிகள்) மட்டுமே வீழ்த்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸில் 94 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ஆறு விக்கெட்டுகள் கையிருப்பில் உள்ள நிலையில், இன்னும் வெற்றிக்கு 211 ரன்கள் தேவைப்படுகிறது.

ஏறத்தாழ 100 ஓவர்கள் இருப்பதாலும், கேப்டன் எல்கர், டெம்பா பவுமா, குவின்டன் டி காக் ஆகியோர் இன்னும் களத்தில் இருப்பதால் தென்னாப்பிரிக்கா வெற்றி வாய்ப்பு சற்று உயர்ந்துள்ளது.

மழை வருமா?

இருப்பினும், இந்தியாவின் ஷமி-பும்ரா-சிராஜ்-தாக்கூர் என்ற வேகக்கூட்டணி 6 விக்கெட்டுகளையும் விரைவாக வீழ்த்தி வெற்றிபெறும் முனைப்பில் இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

சென்சூரியனில் மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மழை குறுக்கிடாமல் போட்டி கடைசி செஷன் வரை சென்று சுவராஸ்யமான முடிவை எட்டும் வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏனென்றால், இந்த போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் முழுவதுமாக ரத்துசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடைசி நாள் போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்கும்.

இதையும் படிங்க: கங்குலிக்கு கரோனா தொற்று; மருத்துவமனையில் அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.