ETV Bharat / sports

SA vs IND Boxing Day Test: டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா - virat Kholi

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.

SA vs IND Boxing Day Test Day 1 Match Update

author img

By

Published : Dec 26, 2021, 2:22 PM IST

சென்சூரியன்: தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களை விளையாட உள்ளது.

ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட இந்த தொடர், பல்வேறு தடுப்பு நடவடிக்கைக்கு இடையில் நடைபெறுகிறது.

டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்சூரியன் நகரின் சூப்பர் ஸ்போர்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் 'பாக்ஸிங் டே' என்றழைக்கப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாளான இன்று (டிசம்பர் 26) தொடங்குகிறது.

மழை வருமா?

இந்நிலையில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். வழக்கம் போல், இரு அணிகளும் நான்கு வேகப்பந்துவீச்சாளர், ஒரு சுழற்பந்துவீச்சாளர் என்ற முறையில் களமிறங்கியுள்ளது. வானிலை சற்று மேக மூட்டத்துடன் காணப்படுவதால், மழை குறித்த அச்சமும் ஏற்பட்டுள்ளது.

இந்திய அணிக்கு தொடக்க வீரர்களாக கே.எல். ராகுல், மயாங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். இந்தியா 6 ஓவர்களுக்கு 8/0 என்ற நிலையில் விளையாடி வருகிறது.

பிளேயிங் XI

இந்தியா: கே.எல். ராகுல், மயாங்க் அகர்வால், செதேஷ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்கயா ரஹானே, ரிஷப் பந்த், ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

தென்னாப்பிரிக்கா: டீன் எல்கர் (கேப்டன்), எய்டன் மார்க்ரம், கீகன் பீட்டர்சன், ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸன், டெம்பா பெவுமா, குவின்டன் டி காக், வீயன் முல்டர், மார்கோ ஜான்சென், கேஷவ் மகராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி.

இதையும் படிங்க: Ashes Boxing Day: கம்மின்ஸின் அதிரடி கம்பேக்; நிதானம் காட்டும் ரூட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.