டெல்லி: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்குகிறது.
இத்தொடருக்கான இந்திய அணி கடந்த ஜூன் மாதமே இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நியூசிலாந்து அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடியது.
மூவர் காயம்
இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் கெண்டைக்கால் எலும்பில் ஏற்பட்ட முறிவால் அவதிப்பட்டு வந்தவர், சென்ற வாரம் நாடு திரும்பினார்.
-
❌ Washington Sundar, Avesh Khan, Shubman Gill ruled out
— ICC (@ICC) July 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
🔹 Prithvi Shaw, Suryakumar Yadav named as replacements
India have made changes to their squad for the upcoming #ENGvIND tour 👇
">❌ Washington Sundar, Avesh Khan, Shubman Gill ruled out
— ICC (@ICC) July 26, 2021
🔹 Prithvi Shaw, Suryakumar Yadav named as replacements
India have made changes to their squad for the upcoming #ENGvIND tour 👇❌ Washington Sundar, Avesh Khan, Shubman Gill ruled out
— ICC (@ICC) July 26, 2021
🔹 Prithvi Shaw, Suryakumar Yadav named as replacements
India have made changes to their squad for the upcoming #ENGvIND tour 👇
இந்நிலையில், கவுண்டி அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி வீரர்கள் ஆவேஷ் கான், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதனால், மூன்று பேரும் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது.
இலங்கை - இங்கிலாந்து
இவர்களுக்கு பதிலாக, இலங்கை முகாமிட்டுள்ள இந்திய இளம் வீரர்களான சூர்யகுமார் யாதவ், பிருத்வி ஷா ஆகியோர் இங்கிலாந்து தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
முன்னதாக, இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதில் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.