தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. இதற்காக தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளைச் சேர்ந்துள்ள அனைத்து வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டு முறையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் ஏற்கனவே இரண்டு வீரர்களுக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மீண்டும் ஒருவருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் அந்த வீரர் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது. மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடருக்காக அணிகளுக்குள் பயிற்சிப் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் திடீரென ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அந்தப் பயிற்சிப்போட்டி ரத்துசெய்யப்பட்டுள்ளது.
இதைப்பற்றி தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் கூறுகையில், ''எந்த வீரர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை இப்போது கூற முடியாது. அவர்கள் அனைவரும் இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் ஆலோசனை செய்துள்ளோம். அதனால் நாங்கள் எங்கள் பொறுப்பினை உணர்ந்து தொடரை சரியாக நடத்துவோம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஐஎஸ்எல் 7: முதல் கோலை அடித்த ஏடிகே-வின் ராய் கிருஷ்ணா; கொண்டாட்டத்தின் புகைப்படங்கள்!