அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற போதிலும், கிரிக்கெட் விளையாடி வந்தபோதும் கடினமான மன அழுத்ததில் தான் இருந்ததாக ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜான்சன் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "நான் சில சமயங்களில் நம்பிக்கையுடன் போராடுகிறேன், நான் இப்போது இரண்டு வருடங்களாக கிரிக்கெட் விளையாடுவதைத் தவிர்த்து வருகிறேன். பலமுறை எனக்கு மனச்சோர்வு ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட் ஒரு விதத்தில் பலதரப்பட்ட விஷயங்களை வெளிப்படுத்துகிறது. விளையாட்டின்போது மனச்சோர்வு வெளிபாடுவதில்லை. ஆனால் போட்டிமுடிந்த பிறகு விடுதியில் அதிக நேரம் தனிமையில் செலவழிக்க வேண்டியுள்ளது. குடும்பத்திலிருந்து நீண்ட காலம் விலகி இருக்க நேரிடுகிறது.
எனது வாழ்க்கையில் கிரிக்கெட்டின் மூலம், நான் மனச்சோர்வைக் கையாண்டேன். பல விஷயங்களில் மனதை சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஜான்சன், ஆஸ்திரேலியா அணிக்காக 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 313 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.