லண்டன் (இங்கிலாந்து): இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவான நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (ஆக. 12) தொடங்குகிறது.
நோ அஸ்வின்
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இங்கிலாந்து அணியில் லாரன்ஸ், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோருக்கு பதிலாக ஹசீப் ஹமித், மொயின் அலி சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணி தரப்பில் காயம் காரணமாக ஷர்துல் தாக்கூர் விலகியதால் இஷாந்த சர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய கேப்டன் விராட் கோலி 4 வேகப்பந்துவீச்சாளர்கள், 1 சுழற்பந்துவீச்சாளர் என்ற 4:1 ஃபார்முலாவில் வழக்கம்போல் களமிறங்கியுள்ளது குறிப்பிடதக்கது.
-
England have opted to bowl in the second #ENGvIND Test.
— ICC (@ICC) August 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
🏴: Moeen, Hameed and Wood come in for Lawrence, Crawley and Broad
🇮🇳: Ishant Sharma replaces Shardul Thakur#WTC23 | https://t.co/rhWT865o91 pic.twitter.com/L08E6h7GL7
">England have opted to bowl in the second #ENGvIND Test.
— ICC (@ICC) August 12, 2021
🏴: Moeen, Hameed and Wood come in for Lawrence, Crawley and Broad
🇮🇳: Ishant Sharma replaces Shardul Thakur#WTC23 | https://t.co/rhWT865o91 pic.twitter.com/L08E6h7GL7England have opted to bowl in the second #ENGvIND Test.
— ICC (@ICC) August 12, 2021
🏴: Moeen, Hameed and Wood come in for Lawrence, Crawley and Broad
🇮🇳: Ishant Sharma replaces Shardul Thakur#WTC23 | https://t.co/rhWT865o91 pic.twitter.com/L08E6h7GL7
பிளேயிங் XI
இங்கிலாந்து அணி: ரோரி ஜோசப் பர்ன்ஸ், டொமினிக் சிப்லி, ஹசீப் ஹமீத், ஜோ ரூட் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், மொயின் அலி, சாம் கரன், ராபின்சன், மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
இந்திய அணி: ரோகித் சர்மா, கே.எல். ராகுல், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்கியா ரஹானே, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
இதையும் படிங்க: ENG vs IND LORDS TEST: அஸ்வினை சேர்க்கலாமா வேண்டாமா; கோலி திட்டம் என்ன?