லீட்ஸ்: இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. முதலாவது போட்டி டிராவான நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், இந்தியா 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இதையடுத்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் (ஆக. 25) லீட்ஸ் நகரின் ஹெடிங்லி மைதானத்தில் தொடங்கியது.
முடிந்தது முதல் இன்னிங்ஸ்
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, தனது முதல் இன்னிங்ஸில் (42.4 ஓவர்கள்) 78 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக ரோஹித் 19 ரன்களையும், ரஹானே 18 ரன்களையும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து பந்துவீச்சுத் தரப்பில் ஆண்டர்சன், ஓவர்டன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் - ராபின்சன், சாம் கரண் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 432 ரன்களை குவித்து, இந்தியாவைவிட 354 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து பேட்டிங்கில் அதிகபட்சமாக ரூட் 121 ரன்களையும், மலான் 70 ரன்களையும் எடுத்திருந்தனர். இந்திய அணி தரப்பில் ஷமி 4 விக்கெட்டுகளையும், சிராஜ், பும்ரா, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
ரோஹித் - புஜாரா
இந்நிலையில், மூன்றாவது நாளான இன்று (ஆக. 27) இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ரோஹித், ராகுல் இணை 19 ஓவர்கள் தாக்குபிடித்தது. கே.எல். ராகுல் 8 ரன்களில் ஓவர்டன் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, முதல் செஷன் முடிவுக்கு வந்தது. மதிய உணவு இடைவேளைக்கு முன்பு வரை (19 ஓவர்கள்) இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 34 ரன்களை எடுத்திருந்தது.
-
Lunch in Leeds 🍲
— ICC (@ICC) August 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
KL Rahul departs with the hosts in command.#WTC23 | #ENGvIND | https://t.co/AZCdNvbRbc pic.twitter.com/5qSfPcVWnG
">Lunch in Leeds 🍲
— ICC (@ICC) August 27, 2021
KL Rahul departs with the hosts in command.#WTC23 | #ENGvIND | https://t.co/AZCdNvbRbc pic.twitter.com/5qSfPcVWnGLunch in Leeds 🍲
— ICC (@ICC) August 27, 2021
KL Rahul departs with the hosts in command.#WTC23 | #ENGvIND | https://t.co/AZCdNvbRbc pic.twitter.com/5qSfPcVWnG
ரோஹித் சர்மா 25 ரன்களுடனும், புஜாரா ரன் ஏதும் இன்றியும் இரண்டாம் செஷனை தொடங்கினர். கடந்த இன்னிங்ஸில் செய்த தவறுகளை உணர்ந்துகொண்டு, இருவரும் இன்று மிகவும் கட்டுப்பாட்டுடன் விளையாடினர். ஓவர்டன், ஆண்டர்சன், ராபின்சன் ஆகியோர் தொடர்ச்சியாக பந்துவீசியும் இருவரின் விக்கெட்டையும் கைப்பற்ற முடியவில்லை.
ரோஹித் அரை சதம்
இதனால், இந்திய அணி 24ஆவது ஓவரில் 50 ரன்களையும், 42ஆவது ஓவரில் 100 ரன்களையும் கடந்து சீரான வேகத்தில் முன்னேறிக்கொண்டிருந்தது. இதற்கிடையே, ரோஹித் சர்மா அரை சதம் கடந்து அசத்தினார். இதையடுத்து, இன்றைய ஆட்டத்தின் இரண்டாம் செஷன் முடிவுக்கு வந்தது.
-
Tea in Leeds ☕️
— ICC (@ICC) August 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
A steady session for the visitors after a vital stand between Rohit Sharma and Cheteshwar Pujara. #WTC23 | #ENGvIND | https://t.co/Z3zxU9aJFe pic.twitter.com/KhPA0mZHg3
">Tea in Leeds ☕️
— ICC (@ICC) August 27, 2021
A steady session for the visitors after a vital stand between Rohit Sharma and Cheteshwar Pujara. #WTC23 | #ENGvIND | https://t.co/Z3zxU9aJFe pic.twitter.com/KhPA0mZHg3Tea in Leeds ☕️
— ICC (@ICC) August 27, 2021
A steady session for the visitors after a vital stand between Rohit Sharma and Cheteshwar Pujara. #WTC23 | #ENGvIND | https://t.co/Z3zxU9aJFe pic.twitter.com/KhPA0mZHg3
இந்திய அணி, தேநீர் இடைவேளைக்கு முன்பு வரை (46 ஓவர்கள்) ஒரு விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 59 ரன்களுடனும், புஜாரா 40 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஓவர்டன் 1 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.
இந்திய அணி, தற்போது 242 ரன்கள் இங்கிலாந்து அணியை விட பின்தங்கியுள்ளது. இன்றைய மூன்றாவது செஷன் முழுவதும் ரோஹித் - புஜாரா இணை ஆட்டமிழக்காமல் இருக்கும் பட்சத்தில் இந்திய அணி பெரிய ஸ்கோரை நோக்கி செல்ல வாய்ப்புள்ளது.
மூன்றாம் நாள் நிலவரம்
முதல் செஷன்: இங்கிலாந்து - 3.2 ஓவர்கள் - 9/2
இந்தியா - 19 ஓவர்கள் - 34/1
இரண்டாம் செஷன்: இந்தியா - 27 ஓவர்கள் - 78/0
இதையும் படிங்க: TOKYO PARALYMPICS: வரலாறு படைக்கும் பவினாபென் படேல்