மெல்போர்ன்: Australia retain the Ashes: மெல்போர்ன்: பாக்ஸிங் டே' என்றழைக்கப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாளான டிசம்பர் 26 ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் 2021 - 22 தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் தொடங்கியது. முதல் இரண்டு போட்டிகளை வென்று ஆஸ்திரேலியா அணி தொடரில் முன்னிலையில் உள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 167 ரன்கள் எடுத்து முதல் நாள் அன்றே ஆல்-அவுட்டானது.
82 ரன்கள் முன்னிலை
பின்னர், ஆஸ்திரேலியா அணி முதல் நாளில் 61 ரன்களை எடுத்து ஒரு விக்கெட்டை மட்டும் இழந்தது. இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி 124 பின்தங்கிய நிலையில், நேற்றைய (டிசம்பர் 27) இரண்டாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது.
-
Australia retain the #Ashes 👏
— ICC (@ICC) December 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
They take an unassailable 3-0 lead in the series after a scintillating display in Melbourne 🙌#AUSvENG | #WTC23 | https://t.co/QKpJv6yy6n pic.twitter.com/nbzHqO184m
">Australia retain the #Ashes 👏
— ICC (@ICC) December 28, 2021
They take an unassailable 3-0 lead in the series after a scintillating display in Melbourne 🙌#AUSvENG | #WTC23 | https://t.co/QKpJv6yy6n pic.twitter.com/nbzHqO184mAustralia retain the #Ashes 👏
— ICC (@ICC) December 28, 2021
They take an unassailable 3-0 lead in the series after a scintillating display in Melbourne 🙌#AUSvENG | #WTC23 | https://t.co/QKpJv6yy6n pic.twitter.com/nbzHqO184m
முந்தைய நாள், நைட் வாட்ச்மேனாக களம் கண்ட நாதன் லயான் தனது பங்கிற்கு இரண்டு பவுண்டரிகளை விரட்டி, ராபின்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்கள் மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
-
England will resume day three in Melbourne on 31/4, trailing by 51 runs, with Joe Root and Ben Stokes at the crease.
— ICC (@ICC) December 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Can the pair mount a fightback?
Watch the #Ashes live on https://t.co/CPDKNx77KV (in select regions) 📺#AUSvENG | #WTC23 | https://t.co/QKpJv6yy6n pic.twitter.com/kvtbpgy9tu
">England will resume day three in Melbourne on 31/4, trailing by 51 runs, with Joe Root and Ben Stokes at the crease.
— ICC (@ICC) December 27, 2021
Can the pair mount a fightback?
Watch the #Ashes live on https://t.co/CPDKNx77KV (in select regions) 📺#AUSvENG | #WTC23 | https://t.co/QKpJv6yy6n pic.twitter.com/kvtbpgy9tuEngland will resume day three in Melbourne on 31/4, trailing by 51 runs, with Joe Root and Ben Stokes at the crease.
— ICC (@ICC) December 27, 2021
Can the pair mount a fightback?
Watch the #Ashes live on https://t.co/CPDKNx77KV (in select regions) 📺#AUSvENG | #WTC23 | https://t.co/QKpJv6yy6n pic.twitter.com/kvtbpgy9tu
மிரட்டிய ஆஸி.,
தொடக்க வீரர் மார்கஸ் ஹாரிஸ் மட்டும் நீண்ட நேரம் களத்தில் இருந்து 76 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இதனால், ஆஸ்திரேலியா முன்னிலை பெற தொடங்கியது. இருப்பினும், பிற வீரர்கள் பெரிய அளவில் சோபிக்காததால் ஆஸ்திரேலியா, 267 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி, 82 ரன்களுக்கு முன்னிலை பெற்றது.
இதன்பின்னர், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஸ்டார்க் வீசிய ஐந்தாவது ஓவரில் சாக் கிராலி, டேவிட் மலான் ஆகியோர் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதையடுத்து, போலாண்ட் 11ஆவது ஓவரை வீசினார். அந்த ஓவரில், ஹசீப் ஹமீத், நைட் வாட்ச்மேனாக வந்த ஜாக் லீச் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தி போலாண்ட் அதிரடி காட்டினர். இதன்மூலம், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் (12 ஓவர்கள்) இங்கிலாந்து அணி 31 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்தது.
-
An early strike in the day from Australia 💥
— ICC (@ICC) December 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Mitchell Starc bowls an absolute peach to knock over Ben Stokes.
England have now lost half their side. #AUSvENG | #WTC23 | https://t.co/QKpJv6yy6n pic.twitter.com/Lld4c2OQ5z
">An early strike in the day from Australia 💥
— ICC (@ICC) December 27, 2021
Mitchell Starc bowls an absolute peach to knock over Ben Stokes.
England have now lost half their side. #AUSvENG | #WTC23 | https://t.co/QKpJv6yy6n pic.twitter.com/Lld4c2OQ5zAn early strike in the day from Australia 💥
— ICC (@ICC) December 27, 2021
Mitchell Starc bowls an absolute peach to knock over Ben Stokes.
England have now lost half their side. #AUSvENG | #WTC23 | https://t.co/QKpJv6yy6n pic.twitter.com/Lld4c2OQ5z
பொங்கல் வைத்த போலாண்ட்
இதனால், 51 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இன்றைய (டிசம்பர் 28) மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஆட்டம் தொடங்கிய சில ஓவர்களிலேயே ஸ்டாக்ஸ் 11 ரன்களில் வெளியேறினார்.
இதன்பின்னர், பேர்ஸ்டோவ் 5, ரூட் 28 ரன்களுடனும், மார்க் வுட், ஓலி ராபின்சன் ஆகியோர் ரன் ஏதும் இன்றியும் போலாண்ட் பந்துவீச்சில் வெளியேறினர். கடைசி பேட்ஸ்மேனான ஜேம்ஸ் ஆண்டர்சன் விக்கெட்டை கேம்ரூன் கிரீன் வீழ்த்த, இங்கிலாந்து அணி 68 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
-
Joe Root is gone ☝️
— ICC (@ICC) December 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Scott Boland gets the England skipper for 28.
England lose their seventh, still trailing by 21 runs. #AUSvENG | #WTC23 | https://t.co/QKpJv6yy6n pic.twitter.com/onGwk4JuET
">Joe Root is gone ☝️
— ICC (@ICC) December 28, 2021
Scott Boland gets the England skipper for 28.
England lose their seventh, still trailing by 21 runs. #AUSvENG | #WTC23 | https://t.co/QKpJv6yy6n pic.twitter.com/onGwk4JuETJoe Root is gone ☝️
— ICC (@ICC) December 28, 2021
Scott Boland gets the England skipper for 28.
England lose their seventh, still trailing by 21 runs. #AUSvENG | #WTC23 | https://t.co/QKpJv6yy6n pic.twitter.com/onGwk4JuET
இதன்மூலம், ஆஸ்திரேலியா அணி இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்களை வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில், ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது மட்டுமில்லாமல் ஆஷஸ் கோப்பையையும் தக்கவைத்துள்ளது.
ஆஸி., 34ஆவது ஆஷஸ்
மேலும், 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை வென்றிருந்த ஆஸ்திரேலியா, இந்த முறையும் ஆஷஸ் தொடரை கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலியா 34ஆவது முறையாக ஆஷஸ் தொடரை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
The 𝐖𝐈𝐍𝐍𝐈𝐍𝐆 moment 🎉#AUSvENG | #WTC23 | #Ashes pic.twitter.com/sudvwH9GdY
— ICC (@ICC) December 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The 𝐖𝐈𝐍𝐍𝐈𝐍𝐆 moment 🎉#AUSvENG | #WTC23 | #Ashes pic.twitter.com/sudvwH9GdY
— ICC (@ICC) December 28, 2021The 𝐖𝐈𝐍𝐍𝐈𝐍𝐆 moment 🎉#AUSvENG | #WTC23 | #Ashes pic.twitter.com/sudvwH9GdY
— ICC (@ICC) December 28, 2021
ஆஸ்திரேலியா வீரர் ஸ்காட் போலாண்ட், இரண்டாவது இன்னிங்ஸில் நான்கு ஓவர்களை வீசி 4 ஓவர்களை வீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்(4-1-7-6).
முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டு உள்பட மொத்தம் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்திய போலாண்ட் ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார். தொடரின் நான்காவது போட்டி ஜனவரி 5ஆம் தேதி சிட்னியில் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: Hockey National Junior Championship: கோப்பையை வென்றது உத்தரப் பிரதேசம்!