ETV Bharat / sports

வரலாற்று சாதனை படைத்த இந்திய மகளிர் அணி.. புகைப்படம் எடுத்துக் கொடுத்த ஆஸ்திரேலிய கேப்டன்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 24, 2023, 7:05 PM IST

ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த இந்திய மகளிர் அணியை கூட்டாக நிற்க வைத்து ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி புகைப்படம் எடுத்து கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

indian womens team
indian womens team

மும்பை: ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட் போட்டி, தலா 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகின்றது. இந்த நிலையில், டெஸ்ட் போட்டி முடிவடந்த நிலையில், இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி தான் முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்கிஸ் முடிவில் அந்த அணியால் 219 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் தஹ்லியா மெக்ராத் மட்டுமே அரைசதம் கடந்தார். மற்ற வீரர்கள் எவரும் பெரிதாக சோபிக்கவில்லை. இந்திய அணியின் சார்பில் பூஜா வஸ்த்ரகர் 4 விக்கெட்களும், சினே ராணா 3 விக்கெட்களும், தீப்தி ஷர்மா 2 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினர்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 406 ரன்களை குவித்தது. இந்திய அணியின் சார்பில் ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ், ரோட்ரிக்ஸ், மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் அரைசதத்தை கடந்தனர். இதனால் இந்திய அணி 187 ரன்கள் முன்னிலை வகித்தது.

இதனைத் தொடர்ந்து இராண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 261 ரன்கள் எடுக்க 75 ரன்களை இலக்காக இந்திய அணிக்கு நிர்ணயித்தது. கடைசி நாளான இன்று (டிச.24) இந்திய அணி 18.4 ஓவர்களில் அந்த இலக்கை எட்டி வராலாற்று வெற்றியை பதிவு செய்தது.

இதன் மூலம் இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணியை முதல் முறையாக இந்திய அணி வீழ்த்தியுள்ளது. கடந்த வாரம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியை இந்திய அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. மேலும், இவ்விரு அணிக்களுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 28ஆம் தேதி தொடங்க உள்ளது.

ஆஸ்திரேலியாவை முதல் முறையாக இந்திய அணியை கூட்டாக நிற்க வைத்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிசா ஹீலி புகைப்படம் எடுத்து கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 35 டிஎஸ்பிகள் இடமாற்றம்..! காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்களுக்கு பணியிடம்: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.