ராஜ்கோட்: ஐசிசி உலகக் கோப்பை கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி நேற்று (அக்.8) தனது முதல் போட்டியாக ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 199 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர் ஜடேஜா 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
இந்நிலையில், ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டியளித்த இந்திய அணி நிச்சயம் உலக கோப்பையை வெல்லும் என ரவீந்திர ஜடேஜாவின் சகோதரி நயனபா ஜடேஜா கூறியுள்ளார். இது குறித்து நயனபா ஜடேஜா கூறுகையில், "இந்திய அணி உலக கோப்பையின் முதல் போட்டியில் வென்றுள்ளது. அவர்கள் 2023க்கான உலகக் கோப்பையை வெல்வார்கள் என நம்புகிறேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய வெல்வது கடினம் என நினைத்தேன். ஆனால் அவர்கள் கடைசி வரை உறுதியாக இருந்தனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டமானது மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்களை கைப்பற்றி சிறப்பாக செயல்பட்டார். வரும் போட்டிகளில் அவரது சிறப்பான ஆட்டத்தை காண்பதற்கு நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம். மேலும், ஒரு குடும்ப உறுப்பினராக அவர் விளையாடுகையில் பல அழுத்தங்களை சந்தித்துள்ளோம்.
அதேபோல் அவர் எத்தனை விக்கெட்களை வீழ்த்துவார், எத்தனை ரன்களை சேர்பார் என சில சமயங்களில் கணிப்பதுண்டு. உதாரணத்திற்கு, நேற்றைய ஆட்டத்தில் அவர் 3 அல்லது 4 விக்கெட்களை கைப்பற்றுவார் என கனித்தோம். அதேபோல் அவர் 3 விக்கெட்களை கைப்பற்றினார்" என்றார்.
வரும் 14ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தை பற்றி நயனபா ஜடேஜா பேசுகையில், "இந்த முறை இந்திய கிரிக்கெட் அணி வித்தியாசமான வடிவத்தில் உள்ளது. அதனால், குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கண்டிப்பாக இந்திய அணி வெல்லும்" இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: NED VS NZ: சான்ட்னர் சுழலில் வீழ்ந்த நெதர்லாந்து.. 99 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி!