ETV Bharat / sports

அஷ்வினின் சாதனையை சமன் செய்த ரவி பிஷ்னோய்! என்ன அது? - இலங்கை அணி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் லெக் ஸ்பின்னரான ரவி பிஷ்னோய் தொடர் நாயகன் விருதை பெற்றதுடன், ரவிச்சந்திரன் அஷ்வினின் சாதனையையும் சமன் செய்துள்ளார்.

Ravi Bishnoi equals Ravichandran Ashwin record

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2023, 8:00 PM IST

பெங்களூரு: ஒருநாள் உலகக் கோப்பையை தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடியது. இந்த தொடர் கடந்த மாதம் 23ஆம் தேதி தொடங்கி நேற்று (டிச.03) முடிவடைந்தது. இத்தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது. ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற முன்னணி வீரர்கள் இல்லாத இந்த தொடரை சூர்யகுமார் யாதவ் வழிநடத்தினார்.

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பையை எதிர் நோக்கி இளம் வீரர்களை கொண்ட அணியை இந்திய நிர்வாகம் உருவாக்கியது. இந்த வாய்ப்பை இளம் வீரர்கள் கச்சிதமாக பயன்படுத்தி கொண்டனர். அந்த அளவிற்கு அவர்களது பங்களிப்பு இருந்தது.

அந்த வகையில், இளம் வீரரான ரவி பிஷ்னோய் தான் விளையாடிய 5 போட்டிகளில் 9 விக்கெட்களை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை பெற்று அசத்தினார். இதன் மூலம் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஷ்வினின் சாதனையை சமன் செய்துள்ளார்.

2016ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் 9 விக்கெட்களை வீழ்த்தியதே முந்தைய சாதனை ஆகும். 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அண்டர் 19 உலகக் கோப்பை தொடரில் 6 போட்டிகளில் 17 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியவர். மேலும், தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் தனது சிறப்பான பங்களிப்பின் மூலம் கடந்த வருடம் இவர் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

இவர் இதுவரை 21 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் 34* விக்கெட்களுடன் 17.38 சராசரியை கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இவர் வர இருக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்களிலும் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டெஸ்ட் தொடரை மட்டும் வழிநடத்தும் டெம்பா பவுமா.. இந்தியாவுக்கு எதிரான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.