ETV Bharat / sports

சுரேஷ் ரெய்னாவின் தந்தை புற்றுநோயால் உயிரிழப்பு!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை திரிலோக்சந்த் ரெய்னா இன்று (பிப்.6) காலை உயிரிழந்தார்.

சுரேஷ் ரெய்னா தந்தை புற்றுநோயால் உயிரிழப்பு!

author img

By

Published : Feb 6, 2022, 4:57 PM IST

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா. இவரது தந்தை திரிலோக்சந்த் ரெய்னா.

இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு காசியாபாத் நகரில் உள்ள தனது இல்லத்தில் தங்கி சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில் உடல்நிலை மோசமடைந்ததன் காரணமாக, திரிலோக்சந்த் ரெய்னா இன்று (பிப்.6) தனது சுயநினைவை இழந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்த சுரேஷ் ரெய்னா உடனடியாக தனது வீட்டிற்கு விரைந்துள்ளார். இவருடைய பூர்வீக ஊர், ஜம்மு காஷ்மீரில் உள்ள ரெய்னாவாரி என்ற கிராமம் ஆகும்.

காஷ்மீர் பண்டிட்களின் துன்புறுத்தலுக்குப் பிறகு, இவரது குடும்பம் காஷ்மீரை விட்டு வெளியேறி காசியாபாத்தில் வசிக்கத் தொடங்கியது.

தந்தையின் கனவை நனவாக்கிய சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னாவின் தந்தை ஓய்வுபெற்ற ராணுவ அலுவலர் ஆவார். சுரேஷ், சிறு குழந்தையாக இருந்தபோது முராத்நகரில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் அவரது தந்தை பணிபுரிந்திருக்கிறார்.

தனது மகன் கிரிக்கெட் உலகில் புகழ்பெற வேண்டும் எனப் பெரிதும் விரும்பியவர். அதன்படி சுரேஷ் ரெய்னாவும் தன் தந்தையின் கனவை நனவாக்கினார்.

இவர் ராணுவத் தொழிற்சாலையில் குண்டுகள் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: லதா மங்கேஷ்கர் மறைவு; திரைத்துறையினர் இரங்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.