ETV Bharat / sports

உலக சாதனை வாய்ப்பை தவற விட்ட இந்திய கிரிக்கெட் அணி!

டி-20 போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற சாதனையை படைக்கும் வாய்ப்பை இந்திய அணி நழுவ விட்டுள்ளது.

india lost
இந்தியா தோல்வி
author img

By

Published : Jun 10, 2022, 8:01 AM IST

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 2018ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை விளையாடிய 12 ஆட்டங்களில் ஒன்றில் கூட தோல்வியை தழுவாமல் அனைத்திலும் வெற்றி பெற்று டி-20 போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற சாதனையை படைத்தது.

அதே போல இந்திய அணி கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற டி -20 உலக கோப்பையில் தொடரில் , ஆப்கானிஸ்தான் , ஸ்காட்லாந்து , நமிபியா, பின்னர் நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி -20 தொடரையும் , வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி 20 தொடரையும் , இலங்கைக்கு எதிரான டி 20 தொடரையும் முழுமையாக கைப்பற்றியது.

அப்போது டி - 20 போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பதிவு செய்த ஆப்கானிஸ்தானுடன் இணைந்தது. இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தால் , தொடர்ச்சியாக 13 ஆட்டங்களில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை இந்தியா படைத்திருக்கும். ஆனால் அந்த வாய்ப்பை இந்திய அணி தவற விட்டுள்ளது.

இதையும் படிங்க: 212 ரன்கள் இலக்கை சேஸ் செய்து தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.