திருவனந்தபுரம் : இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள ஆஸ்திரேலிய அணி தலா 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக நடந்து முடிந்தது. தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி கடந்த நவம்பர் 23ஆம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த ஆட்டம் கடைசி பந்து வரை சென்ற நிலையில், அதில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் பந்துவீச்சை தேர்வு உள்ளார்.
இந்திய அணியின் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராக் கெய்க்வாட் ஆகியோர் இன்னிங்சை தொடங்கினர். அபாரமாக விளையாடிய இருவரும் ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பி குழுமியிருந்த ரசிகர்களை குஷிப்படுத்தினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 77 ரன்கள் குவித்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தது.
-
இந்திய அணி வெற்றி! #etvbharat #etvbharattamil #indvsaus #indvsaust20@bcci @CricketAus #bcci pic.twitter.com/a5vxO0xQwT
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) November 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">இந்திய அணி வெற்றி! #etvbharat #etvbharattamil #indvsaus #indvsaust20@bcci @CricketAus #bcci pic.twitter.com/a5vxO0xQwT
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) November 26, 2023இந்திய அணி வெற்றி! #etvbharat #etvbharattamil #indvsaus #indvsaust20@bcci @CricketAus #bcci pic.twitter.com/a5vxO0xQwT
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) November 26, 2023
யாஷஸ்வி ஜெய்வால் 53 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து இஷான் கிஷன் மற்றொரு தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டுன் இணைந்து ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை கலங்கடித்தார். அபாரமாக விளையாடிய இஷான் கிஷன் தனது பங்குக்கு 52 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கியன் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சீரான இடைவெளியில் விக்கெட் வீழ்ச்சி இருந்தாலும் இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்தினர். கடைசி கட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் (53 ரன்) ரிங்கு சிங் (31 ரன்) இந்திய அணியின் ரன் வேட்டைக்கு உறுதுணையாக இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் குவித்தது.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் எல்லீஸ் 3 விக்கெட்டும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 236 ரன்கள் இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடியது. ஆஸ்திரேலிய வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இந்திய பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
-
A win by 44 runs in Trivandrum! 🙌#TeamIndia take a 2⃣-0⃣ lead in the series 👏👏
— BCCI (@BCCI) November 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Scorecard ▶️ https://t.co/nwYe5nOBfk#INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/sAcQIWggc4
">A win by 44 runs in Trivandrum! 🙌#TeamIndia take a 2⃣-0⃣ lead in the series 👏👏
— BCCI (@BCCI) November 26, 2023
Scorecard ▶️ https://t.co/nwYe5nOBfk#INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/sAcQIWggc4A win by 44 runs in Trivandrum! 🙌#TeamIndia take a 2⃣-0⃣ lead in the series 👏👏
— BCCI (@BCCI) November 26, 2023
Scorecard ▶️ https://t.co/nwYe5nOBfk#INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/sAcQIWggc4
இதில் தொடக்க வீரர்கள் ஸ்டீவ் சுமித் (19 ரன்), மேஷ்யூ ஷார்ட் (19 ரன்) மட்டும் கவுரமான ஸ்கோர் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஜோஸ் இங்கிலீஸ் (2 ரன்), அதிரடி மன்னன் கிளென் மேக்ஸ்வேல் (12 ரன்) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனிடையே கூட்டணி அமைத்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் - டிம் டேவிட் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல போராடினர். இருப்பினும் இந்திய வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் டிம் டேவி 37 ரன்களில் ஆட்டமிழந்தார். நீண்ட நேரம் போராடிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் 45 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பின் ஆஸ்திரேலிய அணி பரிதாபகர நிலைக்கு திரும்பியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி தவித்தது. 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையும் படிங்க : Ind Vs Aus : இந்திய வீரர்கள் அபாரம்! இஷான், ஜெய்ஸ்வால், ருதுராஜ் அரைசதம் விளாசல்!