மொஹாலி : இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று (ஜன. 11) பஞ்சாப்பின், மொஹாலியில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆப்கானிஸ்தான் அணியின் இன்னிங்சை விக்கெட் கீப்பர் ரஹ்மன்னுல்லா குர்பஸ் மற்றும் கேப்டன் இப்ராஹிம் சத்ரான் ஆகியோர் தொடங்கினர். நிதானமாக விளையாடிய இந்த ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்தது.
ரஹ்மன்னுல்லா குர்பஸ் 23 ரன்களில் அகசர் பட்டேல் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் இப்ராஹிம் சத்ரன் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்த போதிலும் முன்னாள் கேப்டன் முகமது நபி பொறுப்புடன் விளையாடி அணி கவுரமான ஸ்கோரை அடைய உதவினார்.
அசமனுதுல்லா ஓமர்சாய் 29 ரன், ரஹ்மத் 3 ரன், முகமது நபி 42 ரன் என குவித்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அனி 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அக்சர் பட்டேல், முகேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஷிவம் துபே 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
-
6⃣,4⃣ and Shivam Dube wraps the chase in style 🙌#TeamIndia win by 6 wickets and take a 1-0 lead in the T20I series 👏👏
— BCCI (@BCCI) January 11, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
Scorecard ▶️ https://t.co/BkCq71Zm6G#INDvAFG | @IDFCFIRSTBank | @IamShivamDube pic.twitter.com/4giZma4f1u
">6⃣,4⃣ and Shivam Dube wraps the chase in style 🙌#TeamIndia win by 6 wickets and take a 1-0 lead in the T20I series 👏👏
— BCCI (@BCCI) January 11, 2024
Scorecard ▶️ https://t.co/BkCq71Zm6G#INDvAFG | @IDFCFIRSTBank | @IamShivamDube pic.twitter.com/4giZma4f1u6⃣,4⃣ and Shivam Dube wraps the chase in style 🙌#TeamIndia win by 6 wickets and take a 1-0 lead in the T20I series 👏👏
— BCCI (@BCCI) January 11, 2024
Scorecard ▶️ https://t.co/BkCq71Zm6G#INDvAFG | @IDFCFIRSTBank | @IamShivamDube pic.twitter.com/4giZma4f1u
தொடர்ந்து 159 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. ரன் கணக்கை துவங்கும் முன்னரே விக்கெட்டை கணக்கை தொடங்கியது இந்திய அணி. ரோகித் சர்மா டக் அவுட்டாகி வெளியேறினார். அவரைத் தொடந்து சுப்மன் கில் 23 ரன், திலக் வர்மா 26 ரன் அகியோர் தங்களால் முடிந்த ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர்.
அபாரமாக விளையாடிய ஷிவம் துபே ஆப்கான் பந்துவீச்சாளர்களை விரட்டி அடித்து அணியை வெற்றிப் பாதை நோக்கி அழைத்துச் சென்றார். அதிரடியாக விளையாடிய ஷிவம் துபே அரை சதம் விளாசினார். 17 புள்ளி 3 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
-
A memorable Mohali outing for Shivam Dube 😎
— BCCI (@BCCI) January 11, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
FIFTY 🆙 for the left-hander and #TeamIndia are just 12 runs away from win 👌👌
Follow the Match ▶️ https://t.co/BkCq71Zm6G#INDvAFG | @IDFCFIRSTBank | @IamShivamDube pic.twitter.com/VkBroq2hD4
">A memorable Mohali outing for Shivam Dube 😎
— BCCI (@BCCI) January 11, 2024
FIFTY 🆙 for the left-hander and #TeamIndia are just 12 runs away from win 👌👌
Follow the Match ▶️ https://t.co/BkCq71Zm6G#INDvAFG | @IDFCFIRSTBank | @IamShivamDube pic.twitter.com/VkBroq2hD4A memorable Mohali outing for Shivam Dube 😎
— BCCI (@BCCI) January 11, 2024
FIFTY 🆙 for the left-hander and #TeamIndia are just 12 runs away from win 👌👌
Follow the Match ▶️ https://t.co/BkCq71Zm6G#INDvAFG | @IDFCFIRSTBank | @IamShivamDube pic.twitter.com/VkBroq2hD4
அதிரடியாக விளையாடிய ஷிவம் துபே 60 ரன்கள் விளாசினார். அவருக்கு உறுதுணையாக விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மா 31 ரன்கள் சேர்த்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் 1-க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதையும் படிங்க : Ind vs Afg 1st t20 : டாஸ் வென்று இந்தியா பந்துவீச்சு தேர்வு!