ETV Bharat / sports

இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்.. ஒயிட் வாஷ் செய்யுமா இந்திய அணி?

author img

By

Published : Mar 12, 2022, 9:38 AM IST

இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது பகலிரவு டெஸ்ட் போட்டி இன்று பெங்களூருவில் தொடங்குகிறது.

india-vs-sri-lanka-second-test-2022
india-vs-sri-lanka-second-test-2022

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. முன்னதாக நடத்த மூன்று டி20 போட்டிகளிலும் இந்தியா 3-0 என கணக்கில் அபார வெற்றிபெற்றது. இதையடுத்து முதலாவது டெஸ்ட் தொடர் போட்டி மார்ச் 4ஆம் தேதி மொகாலியில் நடந்தது.

இந்தப்போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது. அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 175 ரன்களும், ரிஷப் பந்த் 96 ரன்களும், ரவிச்சந்திரன் அஸ்வின் 61 ரன்களும், ஹனுமா விஹாரி 58 ரன்களும் எடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 45 ரன்களை மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார்.

அந்த வகையில் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதைத்தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.

இந்த போட்டியில் இந்திய அணி வென்றால், டி20, டெஸ்ட் தொடர் இரண்டையும் முழுவதும் கைப்பற்றிய பெருமை ரோஹித் சர்மாக்கு வந்துசேரும். ஏனென்றால் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்கும் முதல் டெஸ்ட் தொடர் இது. மேலும் இந்த போட்டியைக் காண 100 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்து குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: IND vs SL: 3ஆவது நாளிலேயே முடித்தது இந்தியா; இலங்கைக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.