ETV Bharat / sports

இந்தியா - இலங்கை இடையே முதல் டி20 போட்டி தொடக்கம்

இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று தொடங்குகிறது.

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா
author img

By

Published : Jan 3, 2023, 10:39 AM IST

மும்பை: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று ஒரு நாள் போட்டிகளிலும், மூன்று டி20 போட்டிகளிலும் விளையாடுகிறது. முதலாவது டி20 போட்டி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இன்று (ஜனவரி 3) இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இரண்டாவது 2ஆவது போட்டி ஜனவரி 5ஆம் தேதி புனேயிலும், மூன்றாவது போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டிலும் (ஜன.7) நடக்கிறது. இந்த போட்டிகளுக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஒரு நாள் தொடரின் முதலாவது போட்டி ஜனவரி 10ஆம் தேதி அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியிலும், இரண்டாவது போட்டி ஜனவரி 12ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலும், மூன்றாவது போட்டி ஜனவரி 15ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலும் நடக்கிறது. இந்த போட்டிகளில் ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அணி டி20 தொடர்: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), இஷான் கிஷன் (கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் படேல். சிங், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், சிவம் மாவி, முகேஷ் குமார்.

இலங்கை அணி டி20 தொடர்: தசுன் ஷனகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா (துணை கேப்டன்), சரித் அசலங்கா, அஷென் பண்டாரா, தனஞ்ஜெயா டி சில்வா, அவிஷ்கா பெர்னாண்டோ, சமிகா கருணரத்னே, லாகிரு குமாரா, தில்ஷன் மதுஷங்கா, குசால் மெண்டிஸ், பதும் நிசங்கா, பிரமோத் மதுஷான், பானுகா ராஜபக்ச, கசுன் ரஜிதா, சதீரா சமரவிக்ரம, மஹீஷ் தீக்‌ஷனா, நுவன் துஷாரா, துனித் வெல்லாலகே.

இதையும் படிங்க: கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடலுக்கு ரசிகர்கள் அஞ்சலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.