மும்பை : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் அதில், இந்தியா, தென் ஆபிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் நாக் அவுட் சுற்றான அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.
-
ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி 50வது சதம்! சச்சின் சாதனை முறியடிப்பு!#ViratKohli | #50thcentury | #Recordbreaking | #INDvsNZ | #ICC | #TeamIndia | #CWC2023 | #ICCWorldCup2023 | #etvbharattamil https://t.co/GsGeZ8AyFt
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) November 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி 50வது சதம்! சச்சின் சாதனை முறியடிப்பு!#ViratKohli | #50thcentury | #Recordbreaking | #INDvsNZ | #ICC | #TeamIndia | #CWC2023 | #ICCWorldCup2023 | #etvbharattamil https://t.co/GsGeZ8AyFt
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) November 15, 2023ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி 50வது சதம்! சச்சின் சாதனை முறியடிப்பு!#ViratKohli | #50thcentury | #Recordbreaking | #INDvsNZ | #ICC | #TeamIndia | #CWC2023 | #ICCWorldCup2023 | #etvbharattamil https://t.co/GsGeZ8AyFt
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) November 15, 2023
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 2019ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கண்ட தோல்விக்கு நியூசிலாந்து அணியை பழிதீர்க்க இந்திய வீரர்கள் மும்முரம் காட்டினர்.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் இன்னிங்சை ரோகித் சர்மா மற்ற்ம் சுப்மான் கில் தொடங்கினர். ஆரம்பமே அதிரடியாக விளையாடி வந்த ரோகித் சர்மா தனது பங்கிற்கு 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சுப்மான் கில்லுடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி, நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை திணறடித்தார்.
இருவரும் ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டிற்கு அனுப்பி குழுமியிருந்த ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினர். அபாரமாக விளையாடிய சுப்மன் கில் 79 ரன்கள் குவித்து இருந்த போது கால் பிடிப்பு பிரச்சினை காரணமாக ரிட்டயர்ட் ஹார்ட் கொடுத்து ஆட்டத்தை விட்டு வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், விராட் கோலியுடன் கூட்டணி அமைத்தார். அபாரமாக விளையாடிய இந்த ஜோடி நியூசிலாந்து பந்துவீச்சை விளாசி தள்ளியது. அடித்து ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் அரை சதம் கடந்தார். மறுமுனையில் தனது ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 50வது சதத்தை பூர்த்தி செய்தார்.
-
Most runs in a single edition of Men's ODI Cricket World Cup ⬇️
— BCCI (@BCCI) November 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Virat Kohli 👏👏 #TeamIndia | #CWC23 | #MenInBlue | #INDvNZ pic.twitter.com/tpSahvSaEL
">Most runs in a single edition of Men's ODI Cricket World Cup ⬇️
— BCCI (@BCCI) November 15, 2023
Virat Kohli 👏👏 #TeamIndia | #CWC23 | #MenInBlue | #INDvNZ pic.twitter.com/tpSahvSaELMost runs in a single edition of Men's ODI Cricket World Cup ⬇️
— BCCI (@BCCI) November 15, 2023
Virat Kohli 👏👏 #TeamIndia | #CWC23 | #MenInBlue | #INDvNZ pic.twitter.com/tpSahvSaEL
50 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்து புது உலக சாதனை படைத்தார். 291 ஆட்டம் 279 இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ள விராட் கோலி, 72 அரைசதம் 50 சதம் என அடித்து ஏறத்தாழ 13 ஆயிரத்து 800 ரன்களை குவித்து சாதனை படைத்து உள்ளார்.
சதம் விளாசிய விராட் கோலி (117 ரன்) சிறிது நேரத்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு தண்ணி காட்டிய ஸ்ரேயாஸ் ஐயர் சதம் விளாசினார். சதம் விளாசிய கையோடு ஸ்ரேயாஸ் ஐயர் (105 ரன்) ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
ஒரு ரன் மட்டும் எடுத்து வந்த வேகத்தில் நடையை கட்டினார். இறுதியில் கே.எல்.ராகுலுடன், சுப்மான் கில் களமிறங்கி கடைசி கட்ட பந்துவீச்சில் துரிய ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அபாரமாக விளையாடிய இருவரும் நியூசிலாந்து பந்துகளை பவுண்டரி, சிக்சர் என பறக்க விட்டனர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன்களை குவித்தது.
-
Innings Break!
— BCCI (@BCCI) November 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
A stellar batting display by #TeamIndia as we set a target of 398 in Semi-Final 1! 🙌
Over to our bowlers 💪
Scorecard ▶️ https://t.co/FnuIu53xGu#CWC23 | #MenInBlue | #INDvNZ pic.twitter.com/R4CKq3u16m
">Innings Break!
— BCCI (@BCCI) November 15, 2023
A stellar batting display by #TeamIndia as we set a target of 398 in Semi-Final 1! 🙌
Over to our bowlers 💪
Scorecard ▶️ https://t.co/FnuIu53xGu#CWC23 | #MenInBlue | #INDvNZ pic.twitter.com/R4CKq3u16mInnings Break!
— BCCI (@BCCI) November 15, 2023
A stellar batting display by #TeamIndia as we set a target of 398 in Semi-Final 1! 🙌
Over to our bowlers 💪
Scorecard ▶️ https://t.co/FnuIu53xGu#CWC23 | #MenInBlue | #INDvNZ pic.twitter.com/R4CKq3u16m
கே.எல்.ராகுல் 39 ரன்களும், சுப்மன் கில் 80 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றனர். நியூசிலாந்து அணியின் டிம் சவுதி 10 ஓவர்கள் வீசி 100 ரன்களை தாரைவார்த்தார். அவரைத் தொடர்ந்து டிரென்ட் பவுல்ட் 10 ஓவர்கள் பந்துவீசி 86 ரன்கள் வாரி வழங்கினார். நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 398 ரன்கள் எடுத்தால் மட்டுமே இறுதி போட்டிக்கு செல்ல முடியும்.
இதையும் படிங்க : Virat Kohli 50th Century : ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி 50வது சதம்! சச்சின் சாதனை முறியடிப்பு!