ETV Bharat / sports

இந்தியாவை திணறடித்து 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி! - lambuschagne

IND Vs AUS 3rd ODI: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2023, 2:55 PM IST

Updated : Sep 27, 2023, 11:03 PM IST

ராஜ்கோட்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அடுத்த மாதம் தொடங்கவுள்ள உலகக் கோப்பை போட்டிக்கு ஆயத்தமாகும் விதத்தில் இந்த தொடர் நடத்தப்படுகிறது.

முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றிய நிலையில் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்திய அணியில் ஓய்வில் இருந்த ரோகித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.

அதனால் கடந்த போட்டியில் சதம் அடித்த கில் நீக்கப்பட்டார். அஷ்வின் நீக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.ஆஸ்திரேலிய அணியில் க்ளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலியா தனது பேட்டிங்கை தொடங்கியது. டேவிட் வார்னர் ப்ரசித் கிருஷ்ணா, சிராஜ் பந்துகளை பவுண்டரிகளாக சிதறடித்தார்.

அரைசதம் அடித்த டேவிட் வார்னர் 56 ரன்கள் அடித்திருந்த நிலையில் ப்ரசித் பந்தில் கீப்பர் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பின்னர் களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித், மார்ஸுடன் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு ஸ்டீவன் ஸ்மித் மற்றும் மார்ஷ் இருவரும் அணியின் ரன் ரேட் குறையாமல் பார்த்துக் கொண்டனர்.

ஆஸ்திரேலிய அணி 215 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த மார்ஷ் கவர் திசையில் பவுண்டரி அடிக்க ஆசைப்பட்டு, குல்தீப் யாதவ் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பின்னர் சிராஜ் பந்தில் 74 ரன்களுக்கு ஸ்மித் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய லம்புஷேனே வழக்கத்துக்கு மாறாக அதிரடியாக ரன்கள் சேர்த்தார்.

அதே நேரத்தில், வந்த வேகத்தில் இரண்டு பவுண்டரிகள் அடித்த அலெக்ஸ் கேரி 11 ரன்களுக்கு பும்ரா பந்தில் அவுட்டானார். பின்னர் பும்ரா வீசிய துல்லியமான யார்க்கரில் மேக்ஸ்வெல் 5 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து களமிறங்கிய க்ரீன் 9 ரன்களுக்கு அவுட்டானார்.

ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும், லம்புஷேனே ஆஸ்திரேலிய அணி ரன் ரேட் குறையாமல் பார்த்துக் கொண்டார். 72 ரன்கள் எடுத்த லம்புஷேனே, பும்ரா பந்தில் அவுட்டானார். முதல் இன்னிங்ஸில் 50 ஒவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா சார்பில் பும்ரா அதிகபட்சமாக 3 விக்கெட் எடுத்தார். இதனையடுத்து 326 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

ரோஹித் சர்மா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் முதலில் களமிறங்கினர். இதில் வாஷிங்டன் சுந்தர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் ரோஹித் சர்மா சிக்ஸர்கள், பவுண்டரிகள் விளாசி 31 பந்துகளில் அரை சதம் அடித்தார். மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வாஷிங்டன் சுந்தர் 18 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

பின்னர், ரோகித்துடன் கை கோர்த்த விராட் கோலி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் ரோகித் சர்மா 5 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 81 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த விராட் கோலி 56 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய கே.எல்.ராகுல் 18 ரன்கள் மட்டுமே எடுக்க, சூர்யகுமார் யாதவும் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஸ்ரேயாஸ் ஐயரும் 48 ரன்களில் கிளென் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் போல்டாகினார். அதன்பின் ரவீந்திர ஜடேஜா ஒருபக்கம் நிதானமாக விளையாடிய நிலையில் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 49.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய கிளென் மேக்ஸ்வெல் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கிளென் மேக்ஸ்வேல், ரோஹித் சர்மா, விராட் கோலி, வாஷிங்டன் சுந்தர், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற இந்திய அணியின் முக்கிய வீரர்களின் விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: ஆசிய விளையாட்டு கிரிக்கெட்! சாதனை மழை பொழிந்த நேபாள கிரிக்கெட் அணி!

Last Updated : Sep 27, 2023, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.