ETV Bharat / sports

India Vs England : பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து மோதல்! வெற்றி யாருக்கு?

India Vs England Warmup Match : உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 4வது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன

Cricket
Cricket
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 30, 2023, 7:29 AM IST

கவுகாத்தி : இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் உலக கோப்பை 4வது பயிற்சி கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெறுகிறது.

13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறுகிறது. மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் விளையாடுகின்றன.

முதல் முறையாக இந்தியாவில் மட்டும் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து வருகின்றனர். உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட பல்வேறு நாடுகளை சேர்ந்த அணிகள் இந்தியாவுக்கு வந்தடைந்தன. உலக கோப்பை தொடங்குவதற்கு முன்னதாக அணிகளுக்கு இடையே பயிற்சி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

அதையொட்டி, அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று (செப். 30) நடைபெறும் 4வது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடுகின்றன. உலக கோப்பை கிரிக்கெட்டுக் முன்னதாக நடப்பு சாம்பியன் இங்கிலாந்துடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவது இந்தியாவுக்கு பலமே.

கடுமையான அணிகளை எதிர்கொள்ளும் போது இந்திய வீரர்களுக்கு அது நல்ல பயிற்சியாக அமையும். அதேநேரம், உலக கோப்பையில் இங்கிலாந்து வீரர்கள் கடும் நெருக்கடி கொடுப்பார்கள் என்பதால் இந்த ஆட்டம் இந்திய அணிக்கு சவாலாக இருக்கும். இந்திய அணியை பொறுத்தவரை முழுமையடைந்த அணியாக காணப்படுகிறது.

பந்துவீச்சு, பேட்டிங் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கக் கூடிய வீரர்கள் இந்திய அணியில் உள்ளனர். அதேநேரம் இங்கிலாந்து வீரர்களுக்கு இந்திய மைதானங்கள் பற்றிய புரிதல்கள் அதிகம் என்பதால் இந்திய வீரர்கள் கவனமுடன் அந்த அணியை கையாள வேண்டும் என்பது நிதர்சனமான உண்மை.

அதேபோல் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இந்த ஆட்டத்தில் மழையின் குறுக்கீடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று (செப். 29) நடந்த தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தன் இடையிலான பயிற்சி ஆட்டமும் மழையின் காரணமாக கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அக்ஸர் பட்டேலுக்கு பதிலாக அஸ்வின் தேர்வானது எப்படி? - பிசிசிஐ அதிகாரியின் சிறப்பு பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.