இந்தூர் : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்ரில் இன்று (செப். 24) நடைபெறுகிறது. இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி பஞ்சாப், மொஹாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணியில் சீனியர் வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்த்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி எதிர்கொண்டது.
அபாரமாக விளையாடிய இந்திய வீரர்கள் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றனர். இந்திய பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலிய அணியை 276 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர். இதில் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்து இருந்தார்.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (செப். 24) இந்தூர் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் கண்ட தோல்விக்கு பழிதீர்க்க இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் வெறி கொண்ட வேங்கை போல் செயல்படுவார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
-
Mohali ✅
— BCCI (@BCCI) September 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Touchdown ✈️ Indore #TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/B6PuZX6cHt
">Mohali ✅
— BCCI (@BCCI) September 23, 2023
Touchdown ✈️ Indore #TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/B6PuZX6cHtMohali ✅
— BCCI (@BCCI) September 23, 2023
Touchdown ✈️ Indore #TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/B6PuZX6cHt
இந்திய மைதானங்களின் ஆடுகள தன்மையை நன்கு அறிந்தவர்கள் ஆஸ்திரேலிய வீரர்கள். அதனால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுப்பார்கள். டேவிட் வார்னர். ஸ்டீவன் சுமித் உள்ளிட்டோர் நிலைத்து நின்று விளையாடும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணி அசால்ட்டாக 300 ரன்களுக்கு மேல் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பிராயச்சித்தம் தேடும் வகையில் அணியில் சில மாற்றங்களை மேற்கொண்டு ஆஸ்திரேலிய அணி கட்டாயம் களமிறங்கும்.
எனவே கடந்த ஆட்டத்தின் வெற்றியை வீரர்கள் மனதில் கொள்ளாமல், புதிதாக ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளப் போகிறோம் என எண்ணி விளையாட வேண்டும். வேகப்பந்து வீச்சில் முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். சுழற்பந்து வீச்சு அணியில் எந்த நிலையில் இருக்கிறது என்பதில் சந்தேகம் நிலவுகிறது.
இன்றைய ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி உலக கோப்பை அணியிலும் இடம் பெற யுக்தியை தமிழக வீரர் அஸ்வின் பெற வேண்டும் என்பதே பலரின் ஆசையாக உள்ளது. மற்றபடி பேட்டிங்கில் சுப்மான் கில், கேப்டன் கே.எல். ராகுல், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோர் நல்ல நிலையில் உள்ளனர்.
அவர்களுடன் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய வீரர்கள் சிம்ம சொப்பனமாக விளங்குவார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. காலத்தை உணர்ந்து இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் வெற்றி வாகை இந்தியாவுக்கே என்பது தான் நிதர்சனமான உண்மை. பகல் 1.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு :
இந்தியா : கே.எல். ராகுல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, திலக் வர்மா, வஷிங்டன் சுந்தர்.
ஆஸ்திரேலியா : ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கேமரூன் கிரீன், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ ஷார்ட், சீன் அபோட், ஆடம் ஜம்பா, அலெக்ஸ் கேரி, ஜோஷ் ஹேசில்வுட், க்ளென் மேக்ஸ்வெல், ஸ்பென்சர் ஜான்சன் , தன்வீர் சங்கா, மிட்செல் ஸ்டார்க், நாதன் எல்லிஸ்
இதையும் படிங்க : ஆசிய விளையாட்டு போட்டி: நேபாளத்தை வீழ்த்திய இந்திய மகளிர் டேபிள் டென்னிஸ் அணி!