ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னி மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் களமிறங்கியதன் மூலம் கேப்டன் விராட் கோலி, 250 ஒருநாள் போட்டிகளில் ஆடியவர் என்ற சாதனை படைத்துள்ளார்.
இந்திய அணிக்காக 250 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆடிய ஒன்பதாவது வீரர் விராட் கோலி. 32 வயதாகும் கோலி, 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இதுவரை இந்திய அணிக்காக 250 ஒருநாள் போட்டிகள், 86 டி20 போட்டிகள், 82 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
இந்திய அணிக்காக அதிக ஒருநாள் போட்டிகளில் ஆடியவர் என்ற பெருமை சச்சினிடமே உள்ளது. இவர் 463 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். இவரைத் தொடர்ந்து தோனி (347), ராகுல் டிராவிட் (340), அஸாருதீன் (334), கங்குலி (308), யுவராஜ் சிங் (301), அனில் கும்ப்ளே (269) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
இதையும் படிங்க: அதானி நிறுவனத்திற்கு எதிராக சிட்னி மைதானத்தில் களமிறங்கிய போராட்டக்காரர்கள்...!