ETV Bharat / sports

'வரலாற்று நிகழ்வை கொண்டாடுங்கள்' - டெஸ்ட் தொடர் வெற்றி குறித்து கோலி பெருமிதம்! - அனுஷ்கா ஷர்மா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இளம் இந்திய அணி வீரர்களுக்கு கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Kohli
Kohli
author img

By

Published : Jan 19, 2021, 3:40 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள இந்திய அணிக்கு பல்வேறு பிரபலங்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

முன்னணி வீரர்கள் யாரும் இல்லாமல் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வென்று இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், " என்ன ஒரு அசத்தலான வெற்றி, அடிலெய்டு போட்டி தோல்விக்குப் பிறகு எங்களை உற்று நோக்கிய பலரும் இப்போது எழுந்து நின்று கவனிக்கின்றனர். இது ஒரு முன்மாதிரியான ஆட்டம், வீரர்களின் உறுதி அனைவரையும் வியக்க வைக்கிறது. அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துகள். இந்த வரலாற்று நிகழ்வை கொண்டாடுங்கள்.. சியர்ஸ்” என பதிவிட்டுள்ளார்.

  • WHAT A WIN!!! Yessssss. To everyone who doubted us after Adelaide, stand up and take notice. Exemplary performance but the grit and determination was the standout for us the whole way. Well done to all the boys and the management. Enjoy this historic feat lads. Cheers 👏🏼🇮🇳 @BCCI pic.twitter.com/CgWElgOOO1

    — Virat Kohli (@imVkohli) January 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முன்னதாக கர்ப்பமாக இருந்த தன்னுடைய மனைவி அனுஷ்கா ஷர்மாவை அருகில் இருந்து கவனித்துக்கொள்வதற்காக முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்த பின்னர் விராட் கோலி இந்தியா திரும்பினார். அனுஷ்கா ஷர்மா - கோலி தம்பதிக்கு கடந்த வாரம் பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கோலி இல்லாமல் குழந்தையுடன் திருமண நாள்கொண்டாடிய அனுஷ்கா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.