ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20, 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. முதலில் ஒருநாள் தொடர் நடக்கவுள்ள நிலையில், இந்திய அணியின் முழு கவனமும் டெஸ்ட் தொடரில் இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று கேப்டன் கோலியால் பதிவிடப்பட்ட ட்விட்டர் வீடியோவில், டெஸ்ட் கிரிக்கெட் பயிற்சிகளை எப்போதும் நேசிக்கிறேன் என மேற்கோள் காட்டிருந்தார். அதேபோல் கேஎல் ராகுலும் பிங்க் பந்தில் பயிற்சி செய்யும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தது.
இதேபோல் ஷமியும், இளம் வீரர் சிராஜும் டெஸ்ட் போட்டிகளுக்காக பிங்க் நிற பந்துகள், சிகப்பு நிற பந்துகளில் பயிற்சி எடுத்த வீடியோவும் வைரலாகி வருகிறது.
-
Love test cricket practice sessions ❤️💙 pic.twitter.com/XPNad3YapF
— Virat Kohli (@imVkohli) November 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Love test cricket practice sessions ❤️💙 pic.twitter.com/XPNad3YapF
— Virat Kohli (@imVkohli) November 17, 2020Love test cricket practice sessions ❤️💙 pic.twitter.com/XPNad3YapF
— Virat Kohli (@imVkohli) November 17, 2020
இந்தப் பயிற்சியில் அனைத்து இந்திய கிரிக்கெட் வீரர்களும் பங்கேற்றுள்ளனர். டி20, ஒருநாள் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த அணியும் இந்தப் பயிற்சியில் ஈடுபடுத்தப்படுகிறது.
மேலும் இரண்டு மாதங்களாக ஐபிஎல் தொடரின்போது வெள்ளை நிற பந்துகளை பயிற்சி மேற்கொண்டதால், இந்த நடைமுறை செயல்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அறிமுகத்திற்கு நான் தயார்: ஆஸி.யின் புதிய சென்சேஷன் புகோவ்ஸ்...!