ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. இதற்காக 17 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய தேர்வுக் குழுத் தலைவர் ட்ரிவர் ஹான்ஸ் கூறுகையில்,
'' மார்ஷ் ஷெஃபீல்டு ஷீல்டு டிராபியில் ஏராளமான இளம் வீரர்கள் சிறப்பாக ஆடியுள்ளனர். அதிலிருந்து கேமரூம் க்ரீன், வில் புகோவ்ஸ்கி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தவிர்க்க முடியாத அளவிற்கு ஆடியுள்ளதால் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் இதுபோன்ற இளம் வீரர்களின் வருகையால் இன்னும் அதிக புத்துணர்வு ஏற்பட்டுள்ளது.
அதேபோல், ஒருநாள் மற்றும் டி20 அணியில் ஆஸ்திரேலியா அணியின் அனுபவ வீரர்கள் அனைவரும் இடம்பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியாவின் அனுபவ வீரர்களில் முக்கியமானவர் ட்ராவிஸ் ஹெட். டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் டிம் பெய்னுக்கு மிகவும் உதவிக்கரமாகவும், நல்ல தலைவராகவும் செயல்படுகிறார்.
இந்திய அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டங்களில் ஆடுவதற்காக ஆஸ்திரேலியாவின் ஏ அணியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: ஷேன் அப்பாட், ஜோ பர்ன்ஸ், பட் கம்மின்ஸ், கேமரூன் க்ரீன், ஜோஷ் ஹெசல்வுட், ட்ராவிஸ் ஹெட், மார்னஸ் லெபுஷான், நாதன் லயன், மைக்கெல் நசர், டிம் பெய்ன் (கேப்டன்), வில் புகோவ்ஸ்கி, ஸ்டீவ் ஸ்மித், மிட்சல் ஸ்டார்க், மிட்சல் ஸ்வெப்சன், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித்.
-
JUST IN: Australia have announced their Test squad to face India #AUSvIND
— cricket.com.au (@cricketcomau) November 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Full details: https://t.co/naLfIBuML4 pic.twitter.com/R2zhIR7X0m
">JUST IN: Australia have announced their Test squad to face India #AUSvIND
— cricket.com.au (@cricketcomau) November 12, 2020
Full details: https://t.co/naLfIBuML4 pic.twitter.com/R2zhIR7X0mJUST IN: Australia have announced their Test squad to face India #AUSvIND
— cricket.com.au (@cricketcomau) November 12, 2020
Full details: https://t.co/naLfIBuML4 pic.twitter.com/R2zhIR7X0m
ஆஸ்திரேலியா ஏ அணி: ஷேன் அப்பாட், ஆஷ்டன் அகர், ஜோ பர்ன்ஸ், ஜேக்சன் பேர்ட், அலெக்ஸ் கேரி, ஹாரி கான்வே, கேமரூன் க்ரீன், மார்கஸ் ஹாரிஸ், ட்ராவிஸ் ஹெட், ஹென்ரிக்ஸ், நிக் மேடின்சன், மிட்சல் மார்ஷ் (உடல்தகுதியைப் பொறுத்து), மைக்கெல் நசர், டிம் பெய்ன், ஜேம்ஸ் பட்டின்சன், வில் புகோவ்ஸ்கி, மார்க் ஸ்டிகீட், வில் சதர்லேட், மிட்சல் ஸ்வெப்சன்.
இதையும் படிங்க: கோலியால் போட்டிபோடும் ஆஸ்திரேலியாவின் இரு தொலைக்காட்சிகள்!