ஹைதராபாத்: ஆஸ்திரேலியா தொடரில் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு புதிதாக வடிவமைக்கப்பட்ட ஜெர்சியை அணிந்து இந்திய அணி வீரர்கள் விளையாடவுள்ளனர்.
ஐபிஎல் தொடருக்கு பின் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு ஒரு நாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று வகை போட்டிகளிலும் விளையாடவுள்ளன. இதையடுத்து இந்திய வீரர்கள் நேற்று (நவ. 11) ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றனர்.
நவம்பர் 27ஆம் தேதி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது.
இதையடுத்து ஒரு நாள் மற்றும் டி20 தொடருக்கு புதிதாக வடிவமைக்கப்பட்ட ஜெர்சியை அணிந்து இந்திய வீரர்கள் விளையாடவுள்ளனர். தற்போதுள்ள ஸ்கை ப்ளூ வண்ணத்திலிருந்து மாறுபட்டு, 1992ஆம் ஆண்டு உலகக் கோப்பையின்போது இந்திய வீரர்கள் அணிந்த நேவி ப்ளூ வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டடுள்ள ஜெர்சியை அணிய உள்ளனர்.
-
Customised PPE Kits✔️
— BCCI (@BCCI) November 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Customised Mask☑️
How cool is this new look! #TeamIndia pic.twitter.com/jnfuG1veWX
">Customised PPE Kits✔️
— BCCI (@BCCI) November 11, 2020
Customised Mask☑️
How cool is this new look! #TeamIndia pic.twitter.com/jnfuG1veWXCustomised PPE Kits✔️
— BCCI (@BCCI) November 11, 2020
Customised Mask☑️
How cool is this new look! #TeamIndia pic.twitter.com/jnfuG1veWX
இதேபோல் ஆஸ்திரேலியா அணியும், அந்நாட்டு பூர்வகுடிகள், புதுமையான வடிவமைப்பில் உருவாக்கியுள்ள உள்நாட்டு ஜெர்சியை அணிந்து களமிறங்கவுள்ளனர்.
1868ஆம் ஆண்டு முதல் முறையாக ஆஸ்திரேலியா அணி கடல் வழியாக இங்கிலாந்து பயணம் மேற்கொண்டு விளையாடிய தொடரின் கதையை கூறும் விதமாக தற்போதைய புதிய ஜெர்சி வடிவமைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த முதல் வெளிநாட்டு தொடரில் ஆஸ்திரேலியா அணி 47 போட்டிகளை பல்வேறு புகழ்பெற்ற மைதானங்களில் விளையாடியுள்ளது.
இதைத்தொடர்ந்து புதிதாக வடிவமைக்கப்பட்டு இந்த ஜெர்சியை ஆஸ்திரேலியா அணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அணிந்திருக்கும் புகைப்படத்தையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
முன்னதாக, ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்வதற்கு முன் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட மாஸ்க், பாதுகாப்பு ஆடைகள் அணிந்து இந்திய அணியினர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பிசிசஐ வெளியிட்டிருக்கிறது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய வீரர்கள் 14 நாள்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருப்பார்கள். அதன் பின்னர் அவர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
இதையும் படிங்க: பூர்வகுடிகளால் வடிவமைக்கப்பட்ட ஜெர்சியை அணியும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா!