ETV Bharat / sports

இந்திய வீரர்கள் யாருக்கும் கரோனா தொற்று இல்லை - பிசிசிஐ அறிவிப்பு

பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதாக தனிமைப்படுத்தப்பட்ட இந்திய அணி வீரர்கள் மற்றும் குழுவினர்களுக்கு கரோனா தொற்று இல்லை என பரிசோதனை முடிவு வந்துள்ள நிலையில், தற்போது அந்த வீரர்கள் அனைவரும் சிட்னியில் மற்ற வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

rohit sharma
ரோஹித் ஷர்மா
author img

By

Published : Jan 4, 2021, 1:20 PM IST

மெல்போர்ன்: இந்திய வீரர்கள் மற்றும் அணிக் குழுவினர்களுக்கு கரோனா தொற்று இல்லை என உறுதியாகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா - இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 7ஆம் நடைபெறவுள்ள நிலையில், இந்திய வீரர்கள் ரோஹித் ஷர்மா, சுப்மன் கில், ரிஷப் பந்த், நவ்தீப் ஷைனி, பிருத்வி ஷா ஆகியோர் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதாக புகார் எழுந்தது.

இதைத்தொடர்ந்து அந்த ஐந்து வீரர்கள் உள்பட இந்திய அணியின் குழுவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு நேற்று (ஜன. 3) கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து இந்திய வீரர்கள் மற்றும் குழுவினர் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்திய வீரர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறி உணவகம் ஒன்றில் ஒன்றாக அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்த வீடியோவை ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ அதிகமாக ஷேர் செய்யப்பட்ட நிலையில், விதிமுறைகளை மீறியதாக மேற்கூறிய வீரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த அணிக் குழுவினர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ நிர்வாகத்தோடு இணைந்து விசாரணமை மேற்கொள்வதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்தது. இருப்பினும் பரிசோதனை முடிவுக்கு வருவதற்கு முன்பே இந்த வீரர்கள் அனைவரும் மற்ற வீரர்களுடன் பயிற்சி மேற்கொள்ள சிட்னிக்கு சென்றனர்.

இதையும் படிங்க: ’அஷ்வின், ஜடேஜா இருவரையும் எதிர்கொள்வது கடினம்' - மேத்யூ வேட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.