ETV Bharat / sports

இந்தியா - வங்கதேசம் ஆட்டத்துல இவ்வளவு விஷயம் இருக்கா? நீங்கள் தெரிஞ்சிக்க வேண்டியவை! - இந்தியா வங்கதேசம்

India Vs Bangladesh : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

India
India
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2023, 1:01 PM IST

புனே : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் 17வது லீக் ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

13வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, வங்கதேசம், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான், உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றன.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்று (அக். 19) நடைபெறும் 17வது லீக் ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் களம் காணுகின்றன. இந்திய அணி ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. உலக கோப்பை புள்ளிப் பட்டியலில் இந்திய அணி 2வது இடத்திலும், 6வது இடத்தில் வங்கதேசம் அணியும் உள்ளது.

சென்னையில் நேற்று (அக். 18) நடைபெற்ற ஆப்கானிஸ்தான அணிக்கு எதிரான ஆட்டத்தில் 149 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. வங்கதேசத்திற்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெறும் பட்சத்தில் மீண்டும் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடிக்கும்.

வங்கதேசம் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சதம் அடித்தால் ஒரு சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார். இதற்கு முன் கடந்த 2015 மற்றும் 2019 ஆகிய இரண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளிலும் வங்கதேசம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் சர்மா சதம் விளாசினார்.

இன்றைய ஆட்டத்திலும் அவர் சதம் விளாசும் பட்சத்தில் உலக கோப்பை வரலாற்றில் ஒரு அணிக்காக மூன்று முறை சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைப்பார். கடந்த 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ரோகித் சர்மா 126 பந்துகளிக்ல் 137 ரன்கள் விளாசினார்.

அதைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்ற ஆட்டத்தில் 92 பந்துகளில் 104 ரன்களை விளாசி இருந்தார். நடப்பு தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 131 ரன், அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக 86 ரன் என ரோகித் சர்மா நல்ல பார்மில் உள்ளார்.

ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் வங்கதேசத்தைல் இந்திய அணி எதிர்கொள்கிறது. இதற்கு முன் கடந்த 1998ஆம் அண்டு நடைபெற்ற கொக்கக் கோலா மூன்று நாடுகள் தொடரில் இந்திய மண்ணில் வங்கதேசத்தை எதிர்கொண்டது. அந்த தொடரில் இந்தியா, வங்கதேசம், கென்யா உள்ளிட்ட நாடுகள் விளையாடி இருந்தன.

அதேபோல் 27 ஆண்டுகளுக்கு பிறகு புனே மைதானத்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதற்கு முன் கடந்த 1996ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் - கென்யா அணிகள் கடைசியாக இந்த மைதானத்தில் விளையாடி இருந்தன.

போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே இந்திய அணியின் வெற்றிக் கூட்டணியில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பில்லை என்று தெரிவித்து இருந்தார். அதனால் கடைசியாக விளையாடிய இந்திய அணியே தற்போதும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருக்கு இன்றைய ஆட்டத்திலும் அணியில் இடம் கிடைக்காது என தெரிகிறது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இதற்கு முன் வங்கதேசம் அணியை 40 முறை இந்திய அணி எதிர்கொண்டு உள்ளது. அதில் 31 முறை இந்திய அணியும், 8 முறை வங்கதேசமும் வெற்றி பெற்று உள்ளன. ஒரு ஆட்டம் முடிவில்லாமல் போனது. இன்றைய ஆட்டத்தில் மழையின் தாக்கம் பெரிய அளவில் இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் :

இந்தியா : ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

வங்கதேசம் : ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), லிட்டன் தாஸ், தன்சித் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தவ்ஹித் ஹ்ரிடோய், மஹ்முதுல்லா, தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம்.

இதையும் படிங்க : India Vs Bangladesh : இந்தியாவுக்கு முட்டுக்கட்டை போடுமா வங்கதேசம்? வெற்றி யாருக்கு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.