ETV Bharat / sports

இந்தியா - இலங்கை கிரிக்கெட் தொடரில் மாற்றம்

author img

By

Published : Jul 10, 2021, 3:26 PM IST

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தியா - இலங்கை
இந்தியா - இலங்கை

இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்தத் தொடர் ஜூலை 13ஆம் தேதி தொடங்குவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இலங்கை பேட்டிங் பயிற்சியாளர் கிரான்ட் பிளாருக்கு கோவிட்-19 உறுதியானதை அடுத்து போட்டித் தொடரில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையடுத்து, இந்தியா - இலங்கை போட்டித் தொடர் ஜூலை 13ஆம் தேதிக்கு பதில் ஜூலை 18ஆம் தேதி தொடங்கவுள்ளது என பி.சி.சி.ஐ பொது செயலர் ஜே ஷா தெரிவித்துள்ளார். இந்தத் தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட நிலையில் தொடக்க வீரர் ஷிகர் தவான் இந்திய அணிக்கு தலைமை தாங்குகிறார்.

தொடரின் மூன்று ஒருநாள் போட்டிகள் ஜூலை 18, 20, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன. அதன்பின், டி20 போட்டிகள் ஜூலை 25ஆம் தேதி தொடங்குகிறது.

இதையும் படிங்க: விம்பிள்டன் 2021: ஜோகோவிச் இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.