ETV Bharat / sports

2ஆவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி - ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டி

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

https://www.etvbharat.com/tamil/tamil-nadu/sports/cricket/shaheen-afridi-withdraws-from-asia-cup/tamil-nadu20220820194926651651378

author img

By

Published : Aug 20, 2022, 9:19 PM IST

ஹராரே: ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. ஹராரே நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ராகுல் பந்துவீசுவதாக அறிவித்தார்.

அதன்படி ஜிம்பாப்வே வீரர்கள் முதலில் களமிறங்கினர். கடந்த ஆட்டத்தை போல இந்த ஆட்டத்திலும் ஜிம்பாப்வேவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இந்திய வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 20 ஓவர்களுக்குள்ளாகவே அந்த அணி 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

நிலைத்து நின்று ஆடிய சீன் வில்லியம்ஸ் தீபக் ஹூடா பந்துவீச்சில் 42 ரன்களுக்கு அவுட் ஆனதும் , ஜிம்பாப்வே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 38.1 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் சர்துல் தாக்கூர் 3 விக்கெட்களும் மற்ற வீரர்கள் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து விளையாடிய இந்திய அணி 25.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தவான் , கில் தலா 33 ரன்கள் எடுத்தனர். பேட்டிங்கில் 43 ரன்களும் , விக்கெட் கீப்பிங்கில் 3 கேட்ச்சும் , ஒரு ரன் அவுட்க்கும் பங்களிப்பு செய்த சஞ்சு சாம்ஸன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஜிம்பாப்வேவில் இந்திய விக்கெட் கீப்பர் ஒருவர் ஆட்ட நாயகன் விருது பெறுவது இதுவே முதல் முறையாகும். மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வரும் திங்கட்கிழமை நடைபெறுகிறது.

இதையும் படிங்க: ஆசிய கோப்பையிலிருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.