ETV Bharat / sports

2ஆவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி: ஆஸி.யை வீழ்த்திய இந்திய அணி - ஜடேஜா 7 விக்கெட்களை எடுத்தார்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணி வெற்றி
இந்திய அணி வெற்றி
author img

By

Published : Feb 19, 2023, 5:18 PM IST

டெல்லி: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையே 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 17ஆம் தேதி டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் அந்த அணி 263 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 81 ரன்களும், ஹேண்ட்ஸ் கோம்ப் 72 ரன்களும் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 262 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய (பிப்.18) ஆட்ட நேர முடிவில் அந்த அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்களை எடுத்தது. இந்நிலையில் இன்று (பிப்.19) 3ம் நாள் ஆட்டம் தொடங்கியது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்கள், சீட்டுக்கட்டுக்களை போல சரிந்தது. ஹெட் 43, லபுஷேன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். முடிவில் ஆஸ்திரேலிய அணி 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 7 விக்கெட்களை எடுத்தார்.

115 ரன்கள் வெற்றி இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் ரோஹித் சர்மா 31, கே.எல்.ராகுல் 1, கோலி 20 ரன்களில் ஆட்டமிழந்தனர். 26.4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பொறுமையாக விளையாடிய புஜாரா 31 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆட்டநாயகன் விருது இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதையும் படிங்க: சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர்ஸ் டென்னிஸ் தொடர் : இந்தியா - இங்கிலாந்து இணை சாம்பியன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.