அகமதாபாத்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
முன்னதாக நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் இந்தியா வென்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில், தொடரின் கடைசிப் போட்டியான மூன்றாவது ஒருநாள் போட்டி அகமதாபாத் மைதானத்தில் இன்று (பிப்ரவரி 11) மதியம் தொடங்கியுள்ளது. இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்தது.
குல்தீப்பிற்கு வாய்ப்பு
முதல் போட்டியில் ஓய்வளிக்கப்பட்டு பின்னர் அணிக்குத் திரும்பிய துணை கேப்டன் கே.எல். ராகுல், இன்றையப் போட்டியில் விளையாடவில்லை. இதனால், ரோஹித் சர்மாவுடன் ஓப்பனிங்கில் அனுபவ வீரர் ஷிகர் தவான் களமிறக்கப்பட்டுள்ளார்.
மேலும், தீபக் ஹூடா, சஹால் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு ஸ்ரேயஸ் ஐயர், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் அகேல் ஹொசைன் நீக்கப்பட்டு ஹெய்டன் வால்ஷ் சேர்க்கப்பட்டுள்ளார்.
-
🚨 Team News 🚨
— BCCI (@BCCI) February 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
4⃣ changes for #TeamIndia as Shikhar Dhawan, Shreyas Iyer, Deepak Chahar & Kuldeep Yadav replace KL Rahul, Deepak Hooda, Shardul Thakur & Yuzvendra Chahal in the team. #INDvWI @Paytm
Follow the match ▶️ https://t.co/9pGAfWtQZV
Here's our Playing XI 🔽 pic.twitter.com/BrCxdkHRRg
">🚨 Team News 🚨
— BCCI (@BCCI) February 11, 2022

Here's our Playing XI 🔽 pic.twitter.com/BrCxdkHRRg🚨 Team News 🚨
— BCCI (@BCCI) February 11, 2022
4⃣ changes for #TeamIndia as Shikhar Dhawan, Shreyas Iyer, Deepak Chahar & Kuldeep Yadav replace KL Rahul, Deepak Hooda, Shardul Thakur & Yuzvendra Chahal in the team. #INDvWI @Paytm
Follow the match ▶️ https://t.co/9pGAfWtQZV
Here's our Playing XI 🔽 pic.twitter.com/BrCxdkHRRg
பிளேயிங் XI
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஷிகர் தவான், ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்
மேற்கிந்திய தீவுகள்: பிராண்டன் கிங், ஷாய் ஹோப், ஷமர் ப்ரூக்ஸ், டேரன் பிராவோ, நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), ஜேசன் ஹோல்டர், ஓடியன் ஸ்மித், ஃபாப்பியன் ஆலன், ஆல்ஸாரி ஜோசப், கீமர் ரோச், ஹெய்டன் வால்ஷ்