ETV Bharat / sports

2-வது டி20 கிரிக்கெட் - இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! - இந்தியா Vs இலங்கை டி20 கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-க்கு 1 என்ற கணக்கில் இலங்கை அணி சமன் செய்தது.

இலங்கை அணி
இலங்கை அணி
author img

By

Published : Jan 5, 2023, 11:10 PM IST

புனே: இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆட்டத்தில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி புனே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்கத்தில் நிதானமாக விளையாடி வந்த இலங்கை வீரர்கள் இடையில் அவசர ஷாட்டுகளை அடித்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

மறுபுறம் விக்கெட் கீப்பர் குசல் மென்டீஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் சரிவை தூக்கி நிறுத்தினார். ஒருகட்டத்தில் இந்தியாவின் கைக்குள் இருந்த ஆட்டம் இறுதியில் மெல்ல நகர்ந்து இலங்கை பக்கம் சென்றது. கேப்டன் ஷனகா, இந்திய பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டு சிக்சர் மற்றும் பவுண்டரிகளை விளாசினார்.

இந்திய பந்து வீச்சு இறுதியில் எடுபடாமல் போனதாக கருதப்படுகிறது. விக்கெட் கீப்பர் குஷல் மென்டீஸ் 52 ரன்களும், கேப்டன் ஷனகா 56 ரன்களும் சேர்த்து இலங்கை அணி 200 ரன்களைத் தாண்ட உதவினர். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு இலங்கை அணி 206 ரன்கள் சேர்த்தது. இந்திய வீரர் ஷிவம் மாவி 4 ஓவர்கள் பந்து வீசி 53 ரன்களை வாரி வழங்கினார்.

207 என்ற சற்று பெரிய இலக்கை எதிர்கொண்டு களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் 2 ரன், சுப்மான் கில் 5 ரன், ராகுல் திரிபாதி 5 ரன், என அடுத்தடுத்து விக்கெட் அணிவகுப்பு நடத்தினர்.

கடந்த ஆட்டத்தில் சொதப்பிய அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் அணியின் நிலை அறிந்து அதிரடி காட்டி துரித ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். தலா 3 சிக்சர் மற்றும் பவுண்டரிகளை பறக்க செய்த சூர்யகுமார் யாதவ் 51 ரன்கள் சேர்த்து கேட்ச் ஆனார்.

மறுபுறம் வீரர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்டினாலும் அக்சர் பட்டேல் நிலைத்து நின்று விளையாடி அணியின் ரன் சேகரிப்புக்கு உதவினார். இறுதி ஓவரில் (19.3) அக்சர் பட்டேல் கேட்ச் ஆனார். 31 பந்துகளை எதிர்கொண்ட அக்சர் 3 பவுண்டரி 6 சிக்சர் என 65 ரன்கள் திரட்டினார்.

இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் சேர்த்தது. இறுதி பந்தில் ஷிவம் மாவி கேட்ச்சாகி அவுட்டானார். இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை 1-க்கு 1 என்ற கணக்கில் இலங்கை அணி சமன் செய்தது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மட்டும் கடைசி கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வரும் 7ஆம் தேதி நடைபெறுகிறது.

இதையும் படிங்க: மும்பை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.