ETV Bharat / sports

IND vs SL: டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனாகா பேட்டிங்கைத் தேர்வுசெய்தார்.

IND vs SL 2nd ODI Toss update
IND vs SL 2nd ODI Toss update
author img

By

Published : Jul 20, 2021, 2:47 PM IST

கொழும்பு (இலங்கை): இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இலங்கை அணிக்கு எதிராக மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 18) நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இதையடுத்து, இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்பு பிரேமதாச மைதானத்தில் இன்று (ஜூலை 20) நடைபெறுகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்துள்ளது.

இலங்கை அணியில் இசுரு உடானா நீக்கப்பட்டு கசுன் ரஜிதா சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இலங்கை அணி: தசுன் ஷனாகா (கேப்டன்), தனஞ்செய டி சில்வா (துணை கேப்டன்), அவிஷ்கா ஃபெர்னாண்டோ, மினோத் பானுகா, பானுகா ராஜபக்ஷ, சாரித் அசலங்கா, வஹிந்து ஹசரங்கா, கசுன் ரஜிதா, சாமிகா கருணாரத்ன, துஷ்மந்தா சமீரா, லக்ஷன் சந்தகன்.

இந்திய அணி: ஷிகார் தவான் (கேப்டன்), புவனேஷ்வரா் குமார் (துணை கேப்டன்), பிருத்வி ஷா, இஷான் கிஷன், மனீஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, தீபக் சஹார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால்.

இதையும் படிங்க: டிஎன்பிஎல் 2021: மழையால் கைவிடப்பட்ட முதல் போட்டி; சுதர்சனின் அதிரடி வீண்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.