மதுரை : மதுரைக்கு வருகை தருகின்ற அல்லது மதுரையை கடந்து செல்கின்ற ரயில் பயணிகள், இனிமேல் ரயில் நிலைய நடை மேடையிலேயே மதுரையின் சிறப்பு வாய்ந்த மல்லிகை பூவை வாங்கி செல்லும் வகையில் மதுரை ரயில்வே கோட்டம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
உள்ளூர் தயாரிப்புகளை பிரபலப்படுத்தும் வகையில் ரயில் நிலையங்களில் "ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு" என்ற தலைப்பின் கீழ் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மதுரை கோட்டத்தில் 35 ரயில் நிலையங்களில் உள்ள 44 விற்பனை நிலையங்களில் உள்ளூர் தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த விற்பனை நிலையங்களில் உள்ளூர் பயணிகள் மற்றும் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி வந்து, பொருட்களை வாங்க வேண்டிய நிலை இருந்து வந்தது. இந்நிலையில் ரயிலில் பயணம் செய்யும் வெளியூர் பயணிகள் அந்தந்த ஊர் தயாரிப்புகளை எளிதில் வாங்கும் வகையில் நடைமேடைகளில் தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Discover local pride at #Madurai & #Dindigul stations with One Station One Product (OSOP) trolleys!
— DRM MADURAI (@drmmadurai) December 16, 2024
Madurai features the fragrant Madurai Malli, while Dindigul showcases the iconic Dindigul Locks.
Support #artisans, #celebrate #tradition, and take home a piece of the region! pic.twitter.com/jRQY3D47Oa
இதையும் படிங்க: உதகை - குன்னூர் மலை ரயில் சேவை மேலும் மூன்று நாட்களுக்கு ரத்து! - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
இந்த புதிய முயற்சியான தள்ளு வண்டிகள் மூலம் விற்பனை செய்யும் முறையை அறிமுகப்படுத்தும் இரண்டாவது கோட்டம் மதுரை கோட்டமாகும். மதுரையின் பிரபல பொருளான மல்லிகை மாலையாக, சரமாக மதுரை ரயில் நிலைய நடை மேடைகளில் உள்ள தள்ளுவண்டிகள் மூலம் விற்பனை செய்யும் நடைமுறை துவக்கப்பட்டுள்ளது.
அதேபோல திண்டுக்கல் நகரில் பிரபலமான பூட்டுக்களும் தள்ளு வண்டியில் விற்பனை செய்யும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் உள்ளூர் சிறு வியாபாரிகள் பயன்பெறுவதோடு அவர்களது வாழ்க்கை தரமும் உயர வழிவகுக்கிறது என மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.