ETV Bharat / state

“உள்ளாட்சி அமைப்புகள் உறுத்தலின்றி கழிவு நீரை வைகையில் கலக்கின்றன” - நீதிபதி காட்டம்! - VAIGAI RIVER CASE

உள்ளாட்சி அமைப்புகள் எந்த விதமான உறுத்தலுமின்றி கழிவு நீரை வைகை ஆற்றில் கலக்கின்றனர். இந்த விஷயத்தில் மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

மதுரை: மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மணி பாரதி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “வைகை ஆறு தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உற்பத்தியாகி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் வழியாக சென்று கடலில் கலக்கிறது.

சுமார் 295 கிலோ மீட்டர் பயணிக்கும் வைகை ஆற்றங்கரையில் பல்வேறு வகை மரங்கள் அடர்த்தியாக இருந்தன. இவை பல ஆண்டுகளுக்கு முன்பே முழுவதும் வெட்டப்பட்டுவிட்டன. தற்போது சீமைக்கருவேல மரங்கள் தான் அடர்த்தியாக காணப்படுகின்றன. வைகையில் தேனி, மதுரை, ராமநாதபுரம் பகுதியில் கழிவுநீர் கலக்கிறது.

மழைநீர் வடிகால் அனைத்தும் கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டன. வைகை ஆற்றின் நீர் அசுத்தம் அடைந்து இருப்பதும் ஆய்வில் உறுதியாகியுள்ளது. வைகை ஆற்றின் நிலையை கருத்தில் கொண்டு தேனி முதல் ராமநாதபுரம் வரை பல்வேறு இடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் சிறப்பு குழு அமைத்து, நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும்.

ஆங்காங்கே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும். மேலும், வைகை ஆற்றை அசுத்தப்படுத்தியவர்களிடம் இழப்பீடு வசூலித்து, அந்த தொகை மூலம் ஆற்றை மறுசீரமைக்கவும் உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு இன்று (டிசம்பர்.16) உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் தரப்பில், “வைகை ஆற்றில் கழிவு நீர் கலக்கும் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்தனர். அதில், தேனி மாவட்டத்தில் 29 இடங்களிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் 2 இடங்களிலும், மதுரை மாவட்டத்தில் 41 இடங்களிலும் கழிவு நீர் வைகை ஆற்றில் கலப்பதை உறுதி செய்துள்ளனர்.

35 ஆண்டுகளாக கழிவு நீரை வைகை ஆற்றில் கலக்கின்றனர். எனவே, நீர்வளத் துறை, நகராட்சி, சுற்றுச் சூழல், உள்ளிட்ட 5 துறை செயலாளர்கள் கலந்து பேசி வைகை ஆற்றில் கழிவு நீர் நேரடியாக கலப்பதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலந்து பேச உள்ளனர். எனவே, கால அவகாசம் வழங்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: 'அட்ஜஸ்ட் செய்தால் பதவி'.. கல்லூரி பெண் முதல்வருக்கு பாலியல் அச்சுறுத்தல்.. - நீதிமன்றம் காட்டம்..!

இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும். நிதி இல்லை என கூறுவது ஏற்புடையது அல்ல. உள்ளாட்சி அமைப்புகள் எந்த விதமான உறுத்தலின்றி கழிவு நீரை வைகை ஆற்றில் கலக்கின்றன.

வரும் காலங்களில் இது போன்று நடக்கக்கூடாது. கழிவு நீர் வைகையில் கலப்பதைத் தடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். வைகையில் கழிவு நீர் கலப்பவர்களுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும். CCTV பொருத்தி கண்காணிக்க வேண்டும்.

வைகை ஆற்றில் நேரடியாக கழிவு நீர் கலப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நீதிமன்றம் உத்தரவிட்டும் ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே, வைகை ஆற்றில் எங்கெல்லாம் கழிவு நீர் நேரடியாக கலக்கிறது.

இதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீர்வளத் துறை, நகராட்சி, சுற்றுச் சூழல், உள்ளிட்ட 5 துறை செயலாளர்கள் கலந்து பேசி, ஒருங்கிணைந்த பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி மாதம் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.