கட்டக்(ஒடிஸா): 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடுவதற்காக இந்தியாவுக்கு தென்னாப்பிரிக்கா அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. பயிற்சியின்போது காயம் காரணமாக கே.எல். ராகுல், குல்தீப் யாதவ் இருவரும் தொடரிலிருந்து விலகினர். இதனால், கேப்டனாக ரிஷப் பந்தும், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டனர்.
கடந்த 9ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
இந்தத் தொடரின் இரண்டாவது டி20 போட்டி ஒடிஸாவின் கட்டக் நகரில் உள்ள பாராபதி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்தியாவின் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் இல்லை. தென்னாப்பிரிக்கா தரப்பில் வீக்கெட் கீப்பர் - ஓப்பனிங் பேட்டர் டி காக், இளம் வீரர் ஸ்டப்ஸ் ஆகியோர் நீக்கப்பட்டு ஹென்ரிச் கிளாசென், ரீசா ஹென்ரிக்ஸ் சேர்க்கப்பட்டனர். கிளாசென் விக்கெட் கீப்பராகும், ஹென்ரிக்ஸ் ஓப்பனராகவும் செயல்படுவார்கள்.
-
A look at the Playing XI for the 2nd T20I.
— BCCI (@BCCI) June 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Live - https://t.co/fLWTMjhyKo #INDvSA @Paytm https://t.co/CHnUIyzxlS pic.twitter.com/WGoEuX8X2m
">A look at the Playing XI for the 2nd T20I.
— BCCI (@BCCI) June 12, 2022
Live - https://t.co/fLWTMjhyKo #INDvSA @Paytm https://t.co/CHnUIyzxlS pic.twitter.com/WGoEuX8X2mA look at the Playing XI for the 2nd T20I.
— BCCI (@BCCI) June 12, 2022
Live - https://t.co/fLWTMjhyKo #INDvSA @Paytm https://t.co/CHnUIyzxlS pic.twitter.com/WGoEuX8X2m
இந்தியா: இஷான் கிஷான், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், யுஸ்வேந்திர சஹால்.
தென்னாப்பிரிக்கா: ரீசா ஹென்ரிக்ஸ், டெம்பா பவுமா (கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸன், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், டுவைன் பிரிட்டோரியஸ், வெயின் பார்னால், ககிசோ ரபாடா, கேசவ் மகாராஜ், ஆன்ரிச் நோர்க்கியா, ஷம்ஸி.
இதையும் படிங்க: ரஞ்சி கிரிக்கெட்: 92 வருட உலக சாதனையை முறியடித்த மும்பை அணி! 725 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி