இங்கிலாந்து அணியின் முக்கிய ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், தான் அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனை, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) உறுதி செய்துள்ளது.
பல மாதங்களாக பென் ஸ்டோக்ஸ் தனது குடும்பத்தைவிட்டு பிரிந்து பயோ-பபுள் சூழலில் இருந்து வந்துள்ளார். மேலும், அவருக்கு ஏற்பட்ட மன அழுத்தமும், இடது ஆள்காட்டி விரலில் ஏற்பட்ட காயமும்தான் இந்த முடிவுக்கு காரணம் என கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், ஸ்டோக்ஸ் எடுத்துள்ள இந்த முடிவை முழுமையாக ஆதரிப்பதாகவும், அவர் தற்காலிகமாக ஓய்வு பெற்றாலும் அவருக்குத் தேவையான உதவிகளை நாங்கள் தொடர்ந்து செய்வோம் எனவும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே நாட்டிங்ஹாமில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரிலும் அவர் பங்கேற்கமாட்டார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
இதையும் படிங்க: இலங்கையிலிருந்து இங்கிலாந்து பறக்கும் இரண்டு இந்திய வீரர்கள்