ETV Bharat / sports

PAK VS SL: ரிஸ்வான், அப்துல்லா ஷபீக் அபாரம்.. 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி! - இலங்கை அணி

Cricket World Cup 2023: ஐசிசி உலகக் கோப்பையின் 8வது லீக் ஆட்டத்தில் இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Pakistan won by 6 wickets
Pakistan won by 6 wickets
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2023, 6:32 PM IST

Updated : Oct 10, 2023, 10:31 PM IST

ஹைதராபாத்: ஐசிசி உலகக் கோப்பை கடந்த 5ஆம் தேதி இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் 8வது போட்டியாக இலங்கை அணி பாகிஸ்தான் அணியை ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பாத்தும் நிஸ்ஸங்க மற்றும் குசல் பெரேரா களம் இறங்கினர். குசல் பெரேரா தான் சந்தித்த 4வது பந்திலேயே விக்கெட் கீப்பர் ரிஸ்வானிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். அதன் பின் வந்த குசல் மெண்டிஸ் - நிஸ்ஸங்காவுடன் கைகொடுக்க, இருவரும் அணிக்கு ரன்களை சேர்த்தனர். இந்த பாட்ர்னர்ஷிப் 102 ரன்களை எட்டிய போது, நிஸ்ஸங்க 51 ரன்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மெண்டிஸ் சதம் விளாசினர்.

பின்னர், களம் கண்ட வீரர்கள் ஹரிதா அசலங்கா 1, தனஞ்சய டி சில்வா 25, கேப்டன் தசுன் ஷனக் 12 ரன்களுடன் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மறுபுறம் நிலைத்து நின்ற சமரவிக்ரமா அதிரடி காட்டினார். அதனைத் தொடர்ந்து 108 ரன்களில் அவரும் விக்கெட் கீப்பர் ரிஸ்வானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 344 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ஹசன் அலி 4 விக்கெட்களை கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி 345 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபீக் மற்றும் இமாம்-உல்-ஹக் விளையாடினர். இதில் இமாம்-உல்-அக் 12 ரன்களில் வெளியேறினார். அதன் பின் களம் வந்த பாபர் அசாம் நிலைக்கவில்லை, அவரும் 10 ரன்களில் ஆட்டமிழக்க, விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மானுமான ரிஸ்வான் - அப்துல்லா ஷபீக்வுடன் கைகோர்த்தார்.

இந்த பார்ட்னர்ஷிப் அணியின் ரன்களை உயர்த்தி வெற்றி பாதைக்கு திருப்பியது. சதம் விளாசிய அப்துல்லா ஷபீக் 113 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய ரிஸ்வானும் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் பாகிஸ்தான் அணி ஓவர்களில் இலக்கை எட்டியது. இதனால் அந்த அணி விக்கெட்கள் 6 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரிஸ்வான் 134, இப்திகார் அகமது 22 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக தில்ஷான் மதுஷங்க 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையும் படிங்க: 2034 FIFA உலகக் கோப்பைக்கான ஏலம்: சவுதி அரேபியா அதிகாரப்பூர்வ கடிதம் சமர்ப்பிப்பு!

Last Updated : Oct 10, 2023, 10:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.