ETV Bharat / sports

South Africa Vs New Zealand : தென் ஆப்பிரிக்கா தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்குமா நியூசிலாந்து! - கிரிக்கெட் செய்திகள்

world cup 2023: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று புனேவின் நடைபெறும் 32வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

new-zealand-vs-south-africa-world-cup-cricket-2023-preview-in-tamil
தென் ஆப்பிரிக்கா தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்குமா நியூசிலாந்து!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2023, 7:32 AM IST

புனே: 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றன.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்று (நவ. 1) நடைபெறும் 32வது லீக் ஆட்டத்தில், டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

புனே மைதானம்: புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று (நவ. 1) மதியம் 2 மணிக்கு இந்த போட்டியானது நடைபெறுகிறது. புனே மைதானத்தில் பவுண்டரிகள் தூரம் குறைவு என்பதால் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்ச்சாக உள்ளது. இதனால் இன்று நடைபெறும் போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலம் & பலவீனம்: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் அபாரமாக விளையாடி வருகிறது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் வெளியேறிய தென் ஆப்பிரிக்க அணி நடப்பு தொடரில் ரூத்ரா தாண்டவம் ஆடி வருகிறது. 6 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் தென் ஆப்பிரிக்க அணி உள்ளது.

நெதர்லாந்து அணிக்கு எதிரான தோல்வியைத் தவிர மற்ற அணைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி உள்ள தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கில் அசுர பலத்தில் காணப்படுகிறது. தொடக்க வீரர் குயின்டன் டி காக் நல்ல பார்மில் உள்ளார். அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 431 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.

மேலும் எய்டன் மார்கரம் (356 ரன்கள்), ஹென்ரிச் கிளாசென் (300 ரன்கள்), ராஸ்ஸி வான் டெர் டஸ்சன் (220 ரன்கள்) ஆகியோரும் அணிக்கு பக்க பலமாகத் திகழ்கின்றனர். தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களை பொறுத்த வரையில், மார்கோ ஜான்சன் 13 விக்கெட்டுகள், ஜெரால்ட் கோட்ஸி 12 விக்கெட்கள், ககிசோ ரபாடா 10 விக்கெட்கள் என தங்களது பங்கை கச்சிதமாக செய்து வருகின்றனர்.

டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி 6 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. கடந்த இரண்டு ஆட்டங்களில் தோல்வியை தழுவிய நியூசிலாந்து அணி அரை இறுதி வாய்ப்பில் தொடர இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அந்த அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் இளம் வீரரான ரச்சின் ரவீந்திராவின் (406 ரன்கள்) அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 3ஆம் இடத்தில் உள்ளார். அதேபோல் டெவோன் கான்வே, டேரில் மிட்செல் ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல பார்மில் உள்ளனர்.

நியூசிலாந்து அணி, பந்து வீச்சிலும் பலம் வாய்ந்ததாக காணப்படுகிறது. அந்த அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னர் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். அதேபோல் வேகப்பந்து வீச்சாளர்களும் தங்களது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இரு அணிகளும் சம பலத்தில் உள்ளதால் இன்று நடைபெறும் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் :

நியூசிலாந்து: டெவன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டாம் லாதம் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்.

தென் ஆப்பிரிக்கா: குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா ( கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டுசென், எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மாகோ ஜான்சன், கேசவ் மகாராஜா, ககிசோ ரபாடா, ஜெரால்ட் கோட்ஸி, தப்ரைஸ் ஷம்சி.

இதையும் படிங்க: சிறந்த கால்பந்து வீரருக்கான Ballon d’Or விருது.. 8வது முறையாக வென்ற மெஸ்ஸி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.