மும்பை: 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்து நாக் அவுட் சுற்றான அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
-
A repeat of the CWC 2019 semi-final 🔥
— ICC (@ICC) November 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Who becomes the first team to secure a spot in the #CWC23 Final? 🤔#INDvNZ pic.twitter.com/fO2v9l1NlR
">A repeat of the CWC 2019 semi-final 🔥
— ICC (@ICC) November 15, 2023
Who becomes the first team to secure a spot in the #CWC23 Final? 🤔#INDvNZ pic.twitter.com/fO2v9l1NlRA repeat of the CWC 2019 semi-final 🔥
— ICC (@ICC) November 15, 2023
Who becomes the first team to secure a spot in the #CWC23 Final? 🤔#INDvNZ pic.twitter.com/fO2v9l1NlR
இந்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியின் இன்னிங்சை ரோகித் சர்மா மற்றும் சுப்மான் கில் தொடங்கினர்.
ஆரம்பம் முதலே அடித்து ஆடிய ரோகித் சர்மா, நியூசிலாந்து வீரர்கள் டிரென்ட் பவுல்ட் மற்றும் டிம் சவுதி ஆகியோரை விளாசித் தள்ளினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் மின்னல் வேகத்தில் நகரத் தொடங்கியது. ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு திருப்பி ரசிகர்களை மகிழ்வித்து வந்த ரோகித் சர்மா, டிம் சவுதி வீசிய பந்தில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அபாரமாக விளையாடிய ரோகித் சர்மா 29 பந்துகளில் தலா 4 பவுண்டரி மற்றும் சிக்சர் விளாசி 47 ரன்கள் சேர்த்து அரைசதத்தை கோட்டை விட்டார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி, மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில்லுடன் சேர்ந்து அதிரடியாக விளையாடி வருகிறார். 15 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 118 ரன்கள் சேர்த்து உள்ளது.
விராட் கோலி 16 ரன்களுடனும், சுப்மான் கில் (52 ரன்) அரைசதம் விளாசியும் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரே ஓவரில் 6 விக்கெட்! அது எப்படி?